கறுப்பு பண விவகாரம் : முகேஷ் அம்பானிக்கு நோட்டீஸ்

Updated : செப் 15, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
கறுப்பு பண விவகாரம் : முகேஷ் அம்பானிக்கு நோட்டீஸ்

மும்பை : கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை கடந்த மார்ச்சில் 'நோட்டீஸ்' அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருந்த 700க்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விபரம் 2011ல் வெளியானது. இது தொடர்பாக கிடைத்த விபரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை துவக்கியது. புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு 2015ல் 'சுவிஸ் லீக்ஸ்' என்ற பெயரில் வெளியிட்ட தகவலில் ஜெனிவா எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1195 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதே தகவலில் வரிவிலக்கு உள்ள வெளிநாடுகளில் இயங்கும் 14 நிறுவனங்களின் கணக்கில் இருந்த 4,200 கோடி ரூபாய்க்கும் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் 14 நிறுவனங்களில் ஒன்றான 'கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்' மூலம் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயன் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை பற்றி பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகள் மூலம் விசாரித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வருமான வரித்துறை முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு கடந்த மார்ச் 28ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானி அவர்களது மூன்று குழந்தைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்களை கண்டறிந்து வரி வசூலிக்கும் கறுப்பு பண தடுப்பு சட்டம் 2015ன் 10-வது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. 'பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் செயல்படும் கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மற்றும் கேமேன் தீவுகளில் செயல்படும் இன்ப்ராஸ்டரக்சர் நிறுவனத்தின் இறுதி பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

'இதுகுறித்த விபரங்களை வருமான வரி கணக்கில் காட்டாதது ஏன்; வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை உடனே தெரிவியுங்கள்' என அம்பானி குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் -12ல் முதல் முறையாக விசாரணைக்கு வருமாறு அம்பானி குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. எனினும் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வந்துள்ள தகவலை ரிலையன்ஸ் குழும செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-செப்-201921:24:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.// - சிதம்பர ரகசியம் மட்டும் வெளியே நாறடிக்கப்பட்டது. ஹா.. ஹா..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-செப்-201920:03:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு 2015ல் 'சுவிஸ் லீக்ஸ்' // சொன்னதால் வெளியே வந்துள்ளது.. இல்லையென்றால் மோசடி சர்க்கார் இதை இன்னமும் மூடி வைத்திருக்கும். அம்பானியின் மோசடிகளுக்கு நிரந்தர மூடி தான் பாதுகாப்பு.,
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
15-செப்-201919:59:28 IST Report Abuse
mohan ஒரு வேளை நாடகமாக இருக்குமோ.... நம்ப முடிய வில்லை...ஏன்னா, அரசாங்கத்தையே.. அவர்கள் போல் ஒரு சிலர் தான் நடத்துறாங்க.... எப்படி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X