அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கைது விவகாரம்: காங்., 4ம் கட்ட போராட்டம்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சிதம்பரத்திற்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ், நாளை, நான்காம் கட்ட போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு, பதிலடி தரும் வகையில், உண்மை நிலை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், துண்டு பிரசுரங்களை வினியோகிக்கவும், தமிழக, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தை கைது செய்தனர். தற்போது அவர், டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'நாட்டில் நிலவும் பொருளாதார சரிவை மறைக்கவே, சிதம்பரம் கைது செய்யப்பட்டார்' என, காங்கிரசார் குற்றம் சாட்டினர். ஆனால், சிதம்பரத்தின் கைது விவகாரத்தில், ஊழல் ஆதாரங்கள் இருப்பதாக, பா.ஜ.,வினர் எதிர்வாதம் செய்கின்றனர்.
தமிழகத்தில், சிதம்பரத்திற்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் சார்பில், ஏற்கனவே, மூன்று முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. குறைந்த எண்ணிக்கையில் தான் தொண்டர்கள் கைதாகினர். இதனால், சிதம்பரம் ஆதரவாளர்களும், அவரது மகன் கார்த்தியும், கடும் அதிருப்தி அடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர், சிவகுமார் கைது சம்பவத்தை கண்டித்து, அங்கு, காங்கிரஸ் தொண்டர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். சிதம்பரத்தை விட, சிவகுமாருக்கு தொண்டர்கள் பலம் அதிகமாக இருக்கிறது என்பதை, அது காட்டியது.இதனால் அதிருப்தி அடைந்த, கார்த்தி, 'காங்கிரசுக்கு, கர்நாடகாவில் இருக்கிற பலம், தமிழகத்தில் இல்லை' என்றார். கார்த்தியின் கருத்தை, சமூக வலைதளங்களில், ஏராளமானோர் கேலி செய்தனர்.
இதனால், மீண்டும் போராட்டம் நடத்துமாறு, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரியிடம், கார்த்தி வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து, சிதம்பரம் பிறந்த நாளை ஒட்டி, நாளை, நான்காம் கட்ட போராட்டம் நடத்த, அழகிரி, கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிதம்பரத்தின் கைது சம்பவத்தின் பின்னணியில் உள்ள, ஊழல் விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர, தமிழக, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. சிதம்பரத்தின் முகத்திரையை கிழிக்கும் விதமாக, பொதுக்கூட்டங்கள் நடத்தவும், துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு, பொது மக்களிடம் வினியோகிக்கவும், தமிழக, பா.ஜ., நிர்வாகிகளுக்கு, டில்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-201919:38:34 IST Report Abuse
RajanRajan அண்ணனுக்கு நாளைய பிறந்த நாள் விழாவுக்கு திஹாரிலே இலவச கஞ்சி காய்ச்சி வழங்க போறாங்க. வாங்க வந்து மனசார வெள்ளையும் சொள்ளையுமா பல்லாண்டு வாழ்க என வாழ்த்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-201919:34:06 IST Report Abuse
RajanRajan இப்படி ஊழல் நாயகர்களுக்கு வக்காலத்து வாங்கியே இந்த காங்கிரஸ் இந்தியாவிலே மொத்தமா முகவாரியே இல்லாம போய்டுமடோ
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-செப்-201907:37:05 IST Report Abuse
Bhaskaran இம்முறை போராட்டத்துக்கு வருபவருக்கு இரண்டு பொட்டலம்பிரியாணி போக்குவரத்து செலவும் வழங்கப்படும் என்று அழகிரி அறிவித்தால் கொஞ்சம் கூட்டம் கூடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X