சிதம்பரம் கைது விவகாரம் : காங்.,க்கு பா.ஜ பதிலடி தர திட்டம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (13)
Advertisement
சிதம்பரம் கைது விவகாரம் : காங்.,க்கு பா.ஜ பதிலடி தர திட்டம்

புதுடில்லி : சிதம்பரத்திற்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ், நாளை, நான்காம் கட்ட போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு, பதிலடி தரும் வகையில், உண்மை நிலை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், துண்டு பிரசுரங்களை வினியோகிக்கவும், தமிழக, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தை கைது செய்தனர். தற்போது அவர், டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'நாட்டில் நிலவும் பொருளாதார சரிவை மறைக்கவே, சிதம்பரம் கைது செய்யப்பட்டார்' என, காங்கிரசார் குற்றம் சாட்டினர். ஆனால், சிதம்பரத்தின் கைது விவகாரத்தில், ஊழல் ஆதாரங்கள் இருப்பதாக, பா.ஜ.,வினர் எதிர்வாதம் செய்கின்றனர்.

தமிழகத்தில், சிதம்பரத்திற்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் சார்பில், ஏற்கனவே, மூன்று முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. குறைந்த எண்ணிக்கையில் தான் தொண்டர்கள் கைதாகினர். இதனால், சிதம்பரம் ஆதரவாளர்களும், அவரது மகன் கார்த்தியும், கடும் அதிருப்தி அடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர், சிவகுமார் கைது சம்பவத்தை கண்டித்து, அங்கு, காங்கிரஸ் தொண்டர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

சிதம்பரத்தை விட, சிவகுமாருக்கு தொண்டர்கள் பலம் அதிகமாக இருக்கிறது என்பதை, அது காட்டியது.இதனால் அதிருப்தி அடைந்த, கார்த்தி, 'காங்கிரசுக்கு, கர்நாடகாவில் இருக்கிற பலம், தமிழகத்தில் இல்லை' என்றார். கார்த்தியின் கருத்தை, சமூக வலைதளங்களில், ஏராளமானோர் கேலி செய்தனர்.இதனால், மீண்டும் போராட்டம் நடத்துமாறு, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரியிடம், கார்த்தி வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து, சிதம்பரம் பிறந்த நாளை ஒட்டி, நாளை, நான்காம் கட்ட போராட்டம் நடத்த, அழகிரி, கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிதம்பரத்தின் கைது சம்பவத்தின் பின்னணியில் உள்ள, ஊழல் விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர, தமிழக, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. சிதம்பரத்தின் முகத்திரையை கிழிக்கும் விதமாக, பொதுக் கூட்டங்கள் நடத்தவும், துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு, பொது மக்களிடம் வினியோகிக்கவும், தமிழக, பா.ஜ., நிர்வாகிகளுக்கு, டில்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
15-செப்-201921:36:54 IST Report Abuse
Nalam Virumbi நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது அப்பனோடு மகனும் திகாரில் சாப்பாடு.
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-செப்-201920:11:03 IST Report Abuse
Anantharaman Srinivasan காங்கிரசுக்கு, கர்நாடகாவில் இருக்கிற பலம், தமிழகத்தில் இல்லை' என்றார். கார்த்திக். சொல்லாமல் விட்டது, தொண்டர்கள் பலத்தைவிட கோடிகோடியாய் பணபலம் இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
15-செப்-201918:57:07 IST Report Abuse
Sampath Kumar இதையே உங்க அமித் ஷா மகன் 1300 சதவிகிதம் வளர்ந்து உள்ளார் யேன்று நான் கூற வில்லை இந்திய அமலாக்க துறை கூறு கிறது எங்கே உங்களுக்கு திராணி இருந்தால் அவரை விசாரிங்க பார்ப்போம் சும்மா கூக்குரல் இட்டால் ஒரு பயனும் இல்லை மடியில் கணம் இல்லை ஏன்றால் வழியில் பயம் ஏன் ?????/ சிக்கியது ஒரு தமிழன் அதனால் உங்க கொண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X