அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் காக்கும் பணியை தொடர்வோம்: ஸ்டாலின்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை:'அன்னைத் தமிழ் காக்கும் பணிகளை, பார்லிமென்டிலும், மக்கள் மன்றத்திலும், தொடர்ந்து செய்திடுவோம்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:பார்லிமென்டில், அண்ணா துரை பேசியபோது, 'நான் திராவிடன் என்று கூறிக் கொள்வதால், வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல' என்றார். அதை நிரூபிப்பதுபோல், தமிழ் மொழி காக்க, நாம் நடத்திய போராட்டம், வங்காளம், மராட்டியம், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட, அனைத்து மாநில மொழிகளுக்கும், வெற்றியை தந்திருக்கிறது.இந்தியா பயணிக்க வேண்டிய பாதையை, அன்றே டில்லிக்கு சுட்டிக்காட்டியவர், அண்ணாதுரை. அந்தப் பாதையிலிருந்து, ஆட்சியாளர்கள் விலகினால், அது, தமிழுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் கேடு விளைவித்து விடும். அதனால் தான், தமிழ் மொழியை காக்க, அண்ணாதுரை வகுத்து தந்த வழியில், வாய்மையுடன் நடைபோடுகிறோம்; போராடுகிறோம். அன்னை தமிழ் காக்கும் பணிகளை, பார்லிமென்டிலும், மக்கள் மன்றத்திலும், தொடர்ந்து செய்திடுவோம். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201922:02:09 IST Report Abuse
ஆரூர் ரங் இப்போ எந்தத்தொண்டனும் கைக்காசு போடுறதில்லை.இது ஏற்கனவே கொடுத்துவெச்சது ஓம் பணம்பணம்  பணம்  எம்பணம்.. 
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
15-செப்-201921:02:54 IST Report Abuse
Viswanathan தமிழை வாழ விடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-201919:41:41 IST Report Abuse
RajanRajan சுடலை முதலில் தமிழை அக்ஷரா பிழை இல்லாம பேச படிக்க எங்கயாச்சும் போயி பயிற்சி எடுத்துட்டு வா. தமிழும் வராது ஹிந்தியும் வராது இங்கிலீசும் வராது இந்த லட்ச்சணத்திலே தமிழ் வால்க என ஒரு கோசம் வேற போட்டுக்கினு ஊரை ஏமாத்துற வேலை பாக்கிறானுங்க. எப்படி வசதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X