மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது மிகவும் அமைதியாகிவிட்டார். தேவையில்லாமல், எந்த அரசியல்வாதியையும் அவர் விமர்சிப்பதில்லை. முன்பெல்லாம், தினமும், பிரதமர், மோடியை கண்டபடி பேசி வந்தார்; பா.ஜ., அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.


இப்போது அவர், 'கப்சிப்!' டில்லி மக்களுக்கு, இலவசமாக தண்ணீர், மின்சார கட்டணத்தில் சலுகை என, தினமும் திட்டங்களை அள்ளி வீசி வருகிறார். காரணம், அடுத்த ஆண்டு, பிப்ரவரியில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது தான். மோடியை திட்டுவதால், எந்த பயனும் கிடையாது; மக்களின் அதிருப்தி தான் மிஞ்சும் என்பதை கெஜ்ரிவால் புரிந்து கொண்டார். சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்த்த போது, கெஜ்ரிவால் மட்டும் மோடியை பாராட்டினார்.

மோடியைப் போலவே, கெஜ்ரிவாலும் அடிக்கடி விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டார். ஆங்கில மற்றும் ஹிந்தி நாளிதழ்களில், முதல் பக்கத்தில், கெஜ்ரிவாலின் படம் போட்ட நலத்திட்ட விளம்பரங்கள், தினமும் வெளியாகின்றன. 'டிவி'க்களிலும், டில்லி அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்கள், கெஜ்ரிவால் படங்களுடன் மின்னுகின்றன. இதற்காக, தினமும், லட்சக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. மோடியைப் பின்பற்றி, அவர் வழியில், விளம்பர மழையில் நனைகிறார் கெஜ்ரிவால்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-செப்-201914:28:38 IST Report Abuse
Malick Raja மூக்கினுள் காற்று புகுந்து வெளிவந்து கொண்டிருக்கும்வரை தன்னிலை உணரா மனிதர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்.. இருக்க முடியும் . இறுதியில் இதையெல்லாம் நினைத்து பிறருக்கு சொல்ல இயலாமலேயே இறுதியாத்திரை முடிந்து விடும். ஆக மனிதநேயம் மனிதமாண்புக்கு உகந்தது இந்த அடிப்படை இருக்குமானால் வையகத்தில் இழுக்கில்லாமல் இருக்கமுடியும் .. ஆக தான்தான் என்றால் அறிவிலி ,தற்குறி கொள்கை வெளிப்படும் இறுதிக்காலம் சொல்லெனா துன்பங்களின் மூலமாகவே இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Velumani K Sundaram - Pondicherry,இந்தியா
15-செப்-201913:17:01 IST Report Abuse
Velumani K Sundaram He is waste and his ideas are rubbish. He will be wiped off from Delhi.
Rate this:
Share this comment
Cancel
15-செப்-201913:10:28 IST Report Abuse
ஆப்பு அப்படியே அமெரிக்கா, இஸ்ரேல், துபாய், சீனான்னு போயிட்டு வாங்க. ஏதவது அவார்டு கிடைக்கிறமாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X