அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவில் அதிருப்தியாளர்களுக்கு புதிய பதவிகள்

Updated : செப் 16, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
அதிமுக, புதிய பதவி, அதிருப்தியாளர்கள், வியூகம், இ.பி.எஸ்,

சென்னை : அ.தி.மு.க.,வில், சில மாவட்டங்களை பிரிக்கவும், புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில், அணிகள் இணைந்த பின், பலர் பதவிகளை எதிர்பார்த்தனர். ஆனால், ஜெயலலிதா இருந்த போது, பதவியில் இருந்தவர்களே தொடர்கின்றனர். நெருக்கடிஜெயலலிதா இருந்தபோது, கட்சி நிர்வாகிகள் மீது, புகார் வந்தால், உடனடியாக, அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். தற்போது, பதவியில் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க, கட்சி தலைமை தயங்குகிறது.இதன் காரணமாக, கட்சி பதவியில் இருப்போர், பதவி பறிபோகும் என்ற, அச்சம் இல்லாமல் உள்ளனர். இது, பதவி இல்லாதவர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது. அதன்பின்னும், நிர்வாகிகள் மாற்றம் பற்றி, தலைமை யோசிக்கவில்லை.கட்சியில், வழிகாட்டி குழு அமைக்க வேண்டும் என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் வலியுறுத்தியும், இதுவரை செயலுக்கு வரவில்லை. பதவி எதுவும் இல்லாமல் இருக்கும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பதவி கேட்டு, நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, இரண்டாக உள்ள மாவட்டங்களை, மூன்றாக பிரிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. தமிழக அரசால், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி என, புதிய வருவாய் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப, கட்சி மாவட்டங்களை பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பதவிஇது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில், ஏராளமானோர் பதவி கேட்டு வருகின்றனர். எனவே, சில மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்கள் உருவாக்கி, நிர்வாகிகளை நியமிக்க, கட்சி தலைமை ஆலோசித்தது. இதை அறிந்ததும், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும், மாவட்ட செயலர் பதவி கேட்டு, நச்சரிக்க துவங்கி உள்ளனர்.ப தவி கேட்பவர்களில், யாருக்கு வழங்குவது என்பதை, முடிவு செய்ய முடியாமல், தலைமை திணறுகிறது. இதன் காரணமாகவே, நிர்வாகிகளை மாற்றம் செய்யாமல், அமைதியாக உள்ளனர்.

அதேநேரத்தில், கட்சி வளர்ச்சி பெற, மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதால், புதிய பதவிகளை உருவாக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. விரைவில், அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-செப்-201915:00:19 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுகவை போல மாவட்ட பதவிகளுக்கு கிராக்கி இல்லை.....காரணம் மாவட்ட பதவிகளுக்கு திமுக போல பிட்பாக்கெட், ரவுடிகள், வழிப்பறி தொண்டர்கள் அணி இல்லையே......
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
15-செப்-201907:10:11 IST Report Abuse
Palanisamy Sekar தேர்தல் வருவதற்குள் பல பூகம்பங்களை எதிர்பார்க்கலாம் போல. இரட்டை தலைமை நல்லவேலைக்கு இல்லாமல் போய்விட்ட்டது. இருந்தாலும் திமுக என்கிற தீயசக்தியை நினைத்தாவது ஒற்றுமையாக செயல்படுங்கள்..அல்லது பா ஜ கவில் இணைந்து செயல்படுங்கள்..நாட்டுக்கு நல்லது ..
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
15-செப்-201907:25:53 IST Report Abuse
Karunanதிருந்தி வரும் பானா சேனா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X