பொது செய்தி

தமிழ்நாடு

தஹில் ரமானி ராஜினாமா: ஜனாதிபதி கையில் முடிவு

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
காத்திருக்கும் கடிதம், தஹில் ரமானி, ராஜினாமா, ஜனாதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வரும், 17ல், இந்தியா திரும்புகிறார். அதன்பின்னரே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின், ராஜினாமா கடிதத்தின் முடிவு தெரிய வரும்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், அங்குள்ள தலைமை நீதிபதி மிட்டலை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் மாற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலீஜியம்' பரிந்துரைத்தது.


போராட்டம்


இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி, தலைமை நீதிபதி தஹில் ரமானி கோரியதை, கொலீஜியம் நிராகரித்தது.இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்வதாக, சென்னை உயர் நீதிமன்ற சக நீதிபதிகளிடம், தஹில் ரமானி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.கொலீஜியம் பரிந்துரைக்கு பின், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இந்த உத்தரவு வருவதற்கு முன், ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி அலுவலகத்துக்கு, தஹில் ரமானி அனுப்பி விட்டார்.தலைமை நீதிபதி இடமாற்றத்தை திரும்ப பெறும்படி, தமிழகத்தை சேர்ந்த, வழக்கறிஞர் சங்கங்கள், ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. கொலீஜியத்தின் முடிவில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தரப்பில் வெளியான அறிக்கையில், 'இடமாற்றத்துக்கான காரணங்களை வெளிப்படுத்துவது, நிறுவனத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்காது; தேவைப்பட்டால், அதை வெளிப்படுத்தவும், கொலீஜியத்துக்கு எந்த தயக்கமும் இல்லை. 'முழுமையாக விவாதித்து, ஒருமனதாக முடிவெடுத்தே, ஒவ்வொரு பரிந்துரைகளும் எடுக்கப்படுகின்றன' என, விளக்கம் அளித்துள்ளது.

.ராஜினாமா கடிதம் அனுப்பினாலே, தலைமை நீதிபதி பதவியில் தொடரவில்லை என்பது தான் அர்த்தம் என, ஒரு தரப்பும், ராஜினாமா கடிதத்தை ஏற்று, ஜனாதிபதி தரப்பில் அறிவிப்பு வெளிவரும் வரை, தலைமை நீதிபதியாக தான் தொடர்வார் என, மற்றொரு தரப்பும் கூறுகின்றன.கடிதம் அனுப்பிய நாளில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதி வரவில்லை. தலைமை நீதிபதி, 'பெஞ்ச்' முன் பட்டியலிட்ட வழக்குகள் எல்லாம், இரண்டாம் நிலையில் உள்ள, நீதிபதி, வினீத் கோத்தாரி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றம், 'தலை' இன்றி இயங்கி வருகிறது. பொதுவாக, தலைமை நீதிபதி பதவி காலியான உடன், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, பொறுப்பு தலைமை நீதிபதி அறிவிக்கப்படுவார்.தீர்வு கிடைக்கும்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிநாடு சென்றிருப்பதால், எந்த அறிவிப்பும் வரவில்லை.இந்நிலையில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்து, வரும், ௧௭ம் தேதிக்கு பின், ஜனாதிபதி, இந்தியா திரும்புகிறார். அதன்பின், தஹில் ராஜினாமா கடிதத்தின் நிலை தெரிய வரும்.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், கே.சக்திவேல் கூறியதாவது: இடமாறுதலுக்கு, கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான உத்தரவை, ஜனாதிபதி தான் பிறப்பிக்க வேண்டும். உடனடியாக உத்தரவு பிறப்பிக்கும்படி, அவரை நிர்ப்பந்திக்க முடியாது. பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யும்படி, ஜனாதிபதி திருப்பி அனுப்ப முடியும்.ராஜினாமா கடிதம் அனுப்பியதால் தான், தலைமை நீதிபதி பதவியில் தொடர்கிறாரா; இல்லையா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது குறித்து, இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அவர் வந்த பின், தற்போது நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
16-செப்-201909:38:40 IST Report Abuse
Rpalnivelu ஒழுக்கமின்மை தமிழக நீதிமன்றங்களில ஊக்குவிக்கப்படுகிறதா?
Rate this:
Share this comment
Cancel
15-செப்-201913:08:47 IST Report Abuse
ஆப்பு இதுல எல்லாம் ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட். எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஜட்ஜ்மெண்ட் தான். தப்பு இவுரு மேலதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X