அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேனர் விவகாரம் ரஜினி, கமல் மவுனம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (12)
Advertisement
  பேனர் விவகாரம்  ரஜினி, கமல் மவுனம்

சென்னை : பேனர் விவகாரத்தில், ரஜினி, கமல் இருவரும், எதுவும் கூறாமல் மவுனம் காக்கின்றனர்.

சென்னையில், சாலையில் கட்டப்பட்ட, பேனர் சரிந்து, இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், முதல் முறையாக, பேனருக்கு எதிராக, ஒருமித்த குரல் கொடுத்தனர்.'பேனர் வைக்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட, பெரும்பாலான நகரங்களில் வைக்கப்பட்ட பேனர்களை, அந்தந்த கட்சி நிர்வாகிகளே, நேற்று அதிரடியாக அகற்றினர். இந்நிலையில், பேனர் விவகாரத்தில், நடிகர்கள் ரஜினி, கமல் வாய் திறக்கவில்லை.அரசியல் கட்சி துவக்கி, சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கமலும், விரைவில் கட்சி துவக்க உள்ள ரஜினியும், இதுபோன்ற விஷயங்களில் மவுனம் சாதிப்பது, அவர்களை பின்தொடர்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பேனர் விவகாரம் குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டு, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினி, பேனர் வைப்பதால், ஆபத்து ஏற்படுவதையும், மக்களுக்கு இடையூறாக, யாரும் பேனர் வைக்க கூடாது என்பதையும், அப்போதே வலியுறுத்தியுள்ளார்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-201920:33:28 IST Report Abuse
rajesh இவனுங்க பொழப்பே இதுலதான் ஓடுது இவனுங்க வாய திறப்பாங்களா???
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
15-செப்-201918:12:08 IST Report Abuse
அம்பி ஐயர் இதே பேனர் விபத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ.... அல்லது முஸ்லிமோ இறந்திருந்தால்.... இந்நேரம் சைக்கோ...குருமா... சைமன்.... தெருமுருகன்...... பியூஷ் போன மனுசன்.... வீரமணி மற்றும் இவர்களை ஆதரிக்கும் சுடலையார் திருக்கூட்டத்தினர் என்னென்ன போராட்டம் நடத்தியிருப்பார்கள்....??? எப்படிஎல்லாம் பேசியிருப்பார்கள்....??? ஜாதி மதத்தினை வைத்து எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் அரசியல் வியாதிகள்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-செப்-201914:51:49 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவனுக பொழப்பில் மண்ணைப் போடும் உத்தரவு.......இதில் எப்படி பேசுவாங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X