எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அழியுமா சினிமா?

Added : செப் 15, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
தமிழ், சினிமா, அழிவு, தயாரிப்பாளர்கள், தியேட்டர்

சென்னை : புதுப்படத்தின், முதல் நாள், முதல் காட்சியை, வீட்டிலேயே பார்க்கும் வசதியை, 'ஜியோ' நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற, கருத்து நிலவுகிறது.

இது குறித்தும், 'வெப் சீரிஸ்' எனும், இணையதள படங்களின் வசூல் குறித்தும், தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான, ஆர்.ரவீந்திரன் அளித்த பேட்டி: பட தயாரிப்பு மட்டுமின்றி, 500க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளேன். சமீபத்தில், விக்ரம் வேதா, ராட்சசன், அறம் உள்ளிட்ட பல படங்கள், நல்ல வரவேற்பை பெற்றன. 'ஆட்டோ சங்கர்' வெப் சீரிஸ், இந்திய அளவில், முதல், 10 இடங்களில் இடம்பெற்றது.

தமிழ் வெப் சீரிசுக்கு, உலகம் முழுவதும், நல்ல வரவேற்பு உள்ளது. விஷால் நடித்த, ஆக் ஷன் படம், பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் நாள், முதல் காட்சியை அறிவித்துள்ள, ஜியோவுக்கான வரவேற்பை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அறிமுகம் மூலம், திரைத்துறையில், பெரிய மாற்றம் வரலாம். ஜியோ நிறுவனம் அறிவித்ததை தான், கமலும், சேரனும், ஏற்கனவே அறிவித்தனர். அப்போதே, அதை நடைமுறைப்படுத்தி இருக்கலாம். தற்போது, தியேட்டரில் அதிகபட்சம், இரண்டு வாரங்கள் தான் படம் ஓடுகிறது.

சமீபத்தில், விக்ரம் வேதா படம், 100 நாட்கள் ஓடியது. ராட்சசன் ஏழு வாரம் ஓடியது. எந்த படமும், 30 நாட்களுக்கு மேல், தியேட்டரில் ஓடுவது இல்லை. மேலும், 100 நாட்கள் ஓடி, வெற்றி விழா கொண்டாடிய படங்கள், பரிசு, கேடயம் வாங்கி, அதிக நாட்கள் ஆகி விட்டன. தமிழ் திரையுலகில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 40 சதவீதம் லாபம் கிடைத்தது. தற்போது, 15 சதவீதம் தான் கிடைக்கிறது.

அதனால் தான், 30 நாட்களில், 'அமேசான்' போன்ற இணையதளங்களுக்கு, படத்தை கொடுக்கிறோம். படங்களின் ஓட்டம், தியேட்டரில் குறைந்து விட்டது. ஜியோ வாயிலாக, புதுப்படங்கள் முதல் நாளே, வீட்டில் ஒளிபரப்பாகும்போது, சல்மான் கான், ரஜினி நடித்த படத்தை, முதல் நாளே வெளியிட்டால், யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால், எப்படி இருந்தாலும், சினிமா அழியாது. 'டிவி' வரும்போது, மற்றவை அழிந்து விடும் என்றனர்; ஆனால், அது நடக்கவில்லை. இணையதள டிக்கெட் முறை வருவது, ல்ல விஷயம். வெளிப்படை தன்மை இருக்கும்.

'பாக்ஸ் ஆபீஸ் கலெக் ஷன்' என்பது, 'கவுன்டர்'களில் விற்கப்படும், டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் தொகையின், மொத்த மதிப்பு. அதில் இருந்து, ஜி.எஸ்.டி., மற்றும் கேளிக்கை வரி, தியேட்டர் செலவு போக, மீதி கிடைப்பது, நிகர லாபம். தியேட்டர் உரிமையாளர்கள், நிகர லாபத்தில் இருந்து, 50 சதவீதத்தை எடுத்து, 50 சதவீதத்தை, படத்தை வெளியிடும் தயாரிப்பாளருக்கோ அல்லது வினியோகஸ்தருக்கோ தருவர். இந்த சதவீதம், ஒவ்வொரு தியேட்டருக்கும், ஒப்பந்த அடிப்படையில் மாறுபடும். இது தான், படத்தின் வருமானம்.

இது, பலருக்கு தெரிவதில்லை. இதில், சில படங்களை, தயாரிப்பாளர்களே வெளியிடுவர். அப்போது லாபமோ, நஷ்டமோ, அது அவர்களையே சாரும். சில படங்களை, அதன் மதிப்பின் அடிப்படையில், மொத்த தயாரிப்பு செலவு போக, சில கோடிகளை அதிகமாக வைத்து, வினியோகஸ்தர்களுக்கு, தயாரிப்பாளர்கள் விற்று விடுவர்.

அப்போது, படத்தின் வசூலில், லாப நஷ்டம் ஏற்பட்டால், அது, வினியோகஸ்தர்களையே சாரும். இது, வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது. வசூல் நிலவரத்தை, செலவோடு சேர்த்து கூறுகின்றனர். இந்தாண்டு வெளியான படங்களில், பேட்ட, விஸ்வாசம் படங்களை தவிர, எந்த படமும் பெரிதாக வசூலிக்கவில்லை. தற்போது, கோமாளி, கொலைகாரன், ஏ1 படங்களில், எதிர்பார்த்த லாபம் கிடைத்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
15-செப்-201923:19:12 IST Report Abuse
Ambika. K தெரு கூத்து என்னும் entertainment ஐ விரட்டியது நாடகம் அதை விரட்டியது சினிமா என்னும மாயை. டிவி சினிமாவை ஓடிக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் ஓரளவே நிகழ்ந்தது உதாரணம் பல சினிமா தியேட்டர்கள் மாலாக மாறியது பழைய சினிமாக்கள் காலை காட்சியாக வலம் வரும் இப்பொழுது அது இல்லை சினிமா மாயை அழியும் அதற்க்கு நிகராக மாற்று entertainment வந்தால் sinima அழியலாம்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201920:41:30 IST Report Abuse
Pugazh V ஒரே ஒரு சினிமாவினால் குறைந்த பட்சம் 50 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன. சும்மா எந்தவித சமுதாய ப் பார்வையோ அல்லது ஜெனரல் நாலெட்ஜோ இல்லாமல், சினிமா ஒழிய வேண்டும் என்றெல்லாம் எழுதுவது தவறு
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-செப்-201920:03:13 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சினிமாத் தொழில் அழியுமானால் தமிழகம் உருப்படும். தஞ்சைக்காரர்கள் கையில் திரைஉலகம் இருந்தவரை நல்ல தரமான படங்கள் வந்தன. 100 நாட்கள் வெள்ளிவிழா கண்களைக் கண்டோம். கோவைக் காரர்கள் திரையுலகில் நுழைந்ததும் அதற்கு கேடுகாலம் துவங்கியது. மதுரைக்காரர்கள் வந்ததும் பாதாளத்துக்கே சென்றது. கௌதமன் ரஞ்சித் போன்றவரக்ள வந்ததும் திரையுலகம் பொறுக்கித் தனமாக ஆகிவிட்டது. அந்த கேவலமான உலகம் அழியுமானால் தமிழகம் உருப்படும்‌ சின்னத்திரைஸசீரியல்களைப் போல் கேவலமான பிழைப்பு ஏதுமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X