களங்கம் கற்பிக்க முடியாது!

Added : செப் 15, 2019
Advertisement
களங்கம் கற்பிக்க முடியாது!

உத்தர பிரதேசத்தில், மஹாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் சிலைகள், சில சமூக விரோத சக்திகளால், சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டன. நள்ளிரவு நேர இருளில் வந்து, மாபெரும் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம், அவர்களை இழிவுபடுத்த நினைக்கின்றனர். இவர்களால், அந்த தலைவர்களின் பெயருக்கும், புகழுக்கும் ஒரு நாளும் களங்கம் கற்பிக்க முடியாது.-பிரியங்காகாங்., பொது செயலர்.
மோதல்களுக்கு முற்றுப்புள்ளி!
ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள இந்தியா - சீனா எல்லைப் பகுதிகள், சரி வர பிரிக்கப்படவில்லை. அதனால் தான், இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே, அடிக்கடி மோதல் போக்கு நிலவுகிறது. இதை, நிரந்தரமாக தவிர்க்க வேண்டும் எனில், இந்தியாவும், சீனாவும் அமர்ந்து பேசி, தங்கள் எல்லைக் கோடு எது என்பதை, தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே, எல்லையில் நிகழும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.-ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால், லடாக் எம்.பி., - பா.ஜ.,
மக்களுக்கு வீண் சிரமம்!
டில்லியில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, ஒற்றை இலக்க பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு நாளிலும், இரட்டை இலக்க வாகனங்களை ஒரு நாளிலும் இயக்கும் திட்டம், ஏற்கனவே தோல்வி அடைந்துள்ளது. அதை மீண்டும் நடைமுறைபடுத்துவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். தங்கள் அரசின் தோல்விகளை மூடி மறைக்கவே, இப்படிப்பட்ட அறிவிப்புகளை, கெஜ்ரிவால் அரசு வெளியிடுகிறது.-மனோஜ் திவாரி, டில்லி பா.ஜ., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X