பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (48)
Advertisement

புதுடில்லி: நம் நாட்டில் போக்குவரத்து விதிமீறல் சர்வ சாதாரணமாகி விட்டது. சிக்னல்களை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது என அத்துமீறல்கள் அதிகரித்து எண்ணிலடங்கா விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.


கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் போக்குவரத்து மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, உடனடி அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், விபத்துக்களால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு, மக்கள் ஓரளவு பின்பற்ற துவங்கி உள்ளனர்.


10 மடங்கு அபராதம்


பெருகி வரும் வாகன விபத்துக்களை குறைப்பது எப்படி என திட்டமிட்ட மத்திய அரசு, அண்மையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தது. அதனை பார்லிமென்டில் நிறைவேற்றியது. இந்த புதிய சட்டப்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச அபராத தொகை 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் ஆனது. அதாவது 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கு முதலில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தாலும், விபத்துக்கள் குறையும் என்பதாலும், விதிமீறினால் உயிர் போகும் என்பதாலும் வரவேற்கின்றனர்.

விதியை மீறுபவர்களுக்கு தானே அபரிதமான கட்டணம் என்பதால் விதியை பின்பற்றுபவர்கள் இதனை வரவேற்கின்றனர். அபராத கட்டணம் அதிகம் என்பதால் வாகன ஓட்டிகளும், கவனமாக, விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவர். தொடர்ந்து அரசு கண்டிப்பு காட்டினால் காலப்போக்கில் விபத்துக்கள் குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாகன விதிமீறலுக்கு அதிகபட்ச தண்டனைகள், அபராதம் விதிப்பதால் தான் அங்கு விபத்துக்கள் பெருமளவு குறைந்துள்ளன. அங்கு கார் ஓட்டுபவர் மட்டுமல்ல, அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்' என்று தெரிவித்துள்ளார்.


பயம் இருக்காது


இதனால் தமிழக அரசும் அபராதத்தை குறைத்தால், விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு பயம் இருக்காது. சிறிய அளவில் அபராதம் செலுத்தி விட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுவர்; ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், ஏதுமறியாத பலர் இறக்க நேரிடும். வாகனம் ஓட்டுதல் மனித உயிர் சம்பந்தமான விஷயம் என்பதால் விதி மீறினால் கண்டிப்பும் தண்டனையும் தேவை என்பதை அரசு உணர்ந்து கட்டணத்தை குறைக்க கூடாது. போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு தான் இந்த அதிகபட்ச கட்டணம் என்பதால், விதியை பின்பற்றி செல்லும் பொதுமக்கள் கவலைப்பட வேண்டியது இல்லை.

மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதால் யாரும் தொடுவது இல்லை; அதே போன்று விதிமீறினால் அதிகபட்ச அபராதமும், தண்டனையும் கிடைக்கும் என்றிருந்தால் யாரும் விதிமீற மாட்டார்கள்.எனவே விதிமீறுபவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, இப்போது நிர்ணயித்துள்ள கட்டணத்தை குறைக்க கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
15-செப்-201913:36:29 IST Report Abuse
Rajas ///////மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதால் யாரும் தொடுவது இல்லை/// ஆனால் மின்சார வயர் அரசாங்க அலட்சியத்தால் மேலே அறுந்து விழுந்தால் என்ன செய்வது. ரோடு நிலைமை, குடித்து விட்டு ஓட்டுவது, ரேஸ் போவது இவர்களை ஏன் அரசு தடுப்பதில்லை. 95 % விபத்தே அவர்களால் தானே நடக்கிறது
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-செப்-201913:19:34 IST Report Abuse
mindum vasantham ஹெல்மெட் சீட் பெல்ட் தவிர மத்த எல்லாத்துக்கும் அதிக பைன் போடலாம் , திமுகவினர் சித்து வேலைகள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் அதை கண்டு கொள்ள கூடாது
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
15-செப்-201912:08:24 IST Report Abuse
Rajas ஹெல்மெட் தவிர மற்ற விதி மீறல்களுக்கு அதிக பைன் போடலாம். ஹெல்மெட் கூட ஏன் என்றால் அதை நமது சீதோஷ்ண நிலைக்கு போட முடியவில்லை. ஹெல்மெட் டிசைனை நம் நாட்டிற்கு ஏற்றால் போல் டிசைன் செய்து விட்டு பின் அதையும் போடவில்லை என்றால் அதிக பைன் போடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X