பா.ஜ.,வில் இணைந்தார் சத்ரபதி சிவாஜி வாரிசு

Added : செப் 15, 2019
Advertisement
 பா.ஜ.,வில் இணைந்தார் சத்ரபதி சிவாஜி வாரிசு

புதுடில்லி:மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜியின் வாரிசான, உதயன்ராஜே போசலே, தேசியவாத காங்., கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின், தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியில் இருந்து பலர், பா.ஜ., மற்றும் சிவசேனாவில் இணைந்து வருகின்றனர்.அந்த வகையில், மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜியின் வாரிசான, உதயன்ராஜே போசலே, பா.ஜ.,வில் இணைந்தார்.லோக்சபா, எம்.பி.,யான இவர், தேசியவாத காங்., கட்சியில் இருந்து விலகினார். மேலும், தன், எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார்.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவர், அமித் ஷா, செயல் தலைவர், நட்டா, மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில், பா.ஜ.,வில் முறைப்படி இணைந்தார்.
இது குறித்து, அமித் ஷா கூறியதாவது:மஹாராஷ்டிரா சட்டசபையில் மொத்தமுள்ள, 288 தொகுதிகளில், கடந்த தேர்தலில், 122 இடங்களில், பா.ஜ., வென்றது.கடந்த, ஐந்து ஆண்டுகளாக, பட்னவிஸ் அரசு மிகவும் சிறப்பான வகையில், ஆட்சி புரிந்து வந்துள்ளது. அதனால், விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். சத்ரபதி சிவாஜியின் வாரிசு, எங்களுடைய கட்சியில் இணைந்துள்ளது, இந்த நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
பவார் சுற்றுப்பயணம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து, மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி வருவது, அக்கட்சிக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில், மஹாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, தேசியவாத காங்., தலைவர், சரத் பவார் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக, நாளை மறுநாள், சோலாபுர்,பீட் உட்பட, 10 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ., 'மாஜி' தாவினார்
தேசியவாத காங்.,கில் இருந்து பலர், பா.ஜ.,வில் இணைந்து வரும் நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள், எம்.எல்.ஏ.,வான விஜய் கோட்மரே, கட்சித் தலைவர் சரத் பவார் முன்னிலையில், தேசியவாத காங்.,கில் நேற்று இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X