அரசியல் செய்தி

தமிழ்நாடு

எது நடந்தால் இவர்களுக்கு என்ன? 'கெத்து' காட்டிய குமரி அ.தி.மு.க.,வினர்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 எது நடந்தால் இவர்களுக்கு என்ன?  'கெத்து' காட்டிய குமரி அ.தி.மு.க.,வினர்

நாகர்கோவில்:சென்னையில் உயிர் பலி நடந்த பின்பும், அதை பற்றி துளியும் கவலையின்றி, நாகர்கோவில் அருகே, அமைச்சர் பங்கேற்ற விழாவில், அடுக்கடுக்காக பேனர் வைத்த, அ.தி.மு.க .,வினரின் நடவடிக்கை, மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே, சுங்கான்கடை தனியார் பொறியியல் கல்லுாரியில், தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு, நேற்று நடந்தது. அதில், தொழில்துறை அமைச்சர், சம்பத், கலெக்டர், பிரசாந்த வடநேரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சரை வரவேற்கும் வகையில், கருத்தரங்கு நடத்துவோர் சார்பிலும், அ.தி.மு.க.,வினர் சார்பிலும், பேனர்கள் வைக்கப்பட்டன.சுங்கான்கடை சந்திப்பில் இருந்து, கல்லுாரி வரை, 40க்கும் மேற்பட்ட, பெரிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.அதில், ஜெயலலிதா, முதல்வர், துணை முதல்வர், சம்பத், தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் படங்கள் இடம் பெற்றுஇருந்தன. சமீபத்தில், சென்னையில், பேனர் விழுந்து, இளம்பெண் இறந்தார்; இது குறித்து, நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த பின்பும், எதை பற்றியும், துளி கூட கவலைப்படாமல், ஆளுங்கட்சியினர், பேனர்கள் அமைத்திருந்தனர்.இந்த படங்களை, சமூக வலைதளங்களில் பகிர்ந்த பொது மக்கள், ஆவேசமாக கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களுக்கு, போன் செய்து, 'வறுத்து' எடுத்தனர்.இதை தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், அவசரம் அவசரமாக, பேனர்களை அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X