அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வேலை

Added : செப் 15, 2019
Advertisement

அருப்புக்கோட்டை:'' ஆட்சியை குறை கூறுவதே தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு பணியாக உள்ளது.,''என, அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.

அருப்புக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 99 சதவீதம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து விட்டது. கருணாநிதியால் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த முடியவில்லை. ஜெ, கூட்டுறவு தேர்தலை நடத்த ஒரு ஆணையம் அமைத்து வெற்றிகரமாக தேர்தலை நடத்தினார். இந்த ஆட்சியை குறை கூறுவதே தி.மு.க., தலைவருக்கு பணியாக உள்ளது. இதை தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது. சிதம்பரத்தை கைது செய்த பின்பு ஸ்டாலின் மத்திய அரசை விமர்சனம் செய்வதில் பின் வாங்கி உள்ளார். இப்போது 'செல்பி' எடுக்க விடுகிறார். ஆட்சியில் இருந்த போது 'செல்பி' எடுக்க கேட்டால் செவியில் தான் அறைவார். தி.மு.க., ஆட்சியில் அவரை நெருங்க முடியாது. நம் முதல்வரை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுகலாம். தி.மு.க., ஆட்சியில் அரிசியை லாரிகள், கூட்ஸ் வண்டிகளில் கடத்தினர். இப்போது அப்படி செய்ய முடியாது. முறையான நிர்வாகம் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X