பாக்.,துண்டு துண்டாகும்: ராஜ்நாத்சிங்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (24)
Advertisement

சூரத்:இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்புடன் இருந்தனர். பாதுகாப்புடன் இருப்பர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார்.







குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: காஷ்மீர் மாநிலத்தில் 370 -வது பிரிவை அகற்றிய இந்தியாவின் முடிவை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை. பாக்., பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் அந்நாடு சிதைவதை யாராலும் தடுக்க முடியாது.






சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவில் சிறுபான்மையினர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தியாவில் அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர். பாதுகாப்புடன் இருப்பர். இந்தியா சாதி அல்லது மத அடிப்படையில் மக்களை பிரிக்க வில்லை.அதே நேரத்தில் பாகிஸ்தானில் சீக்கியர்கள் புத்த மதத்தவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தொடர்ந்து வருகிறது.

மேலும் பாக்., பிரதமர் இம்ரான்கான் தன் நாட்டு மக்களுக்கு கட்டுப்பாட்டுகோட்டை கடக்க வேண்டாம் என்ற நல்ல ஆலோசனையை சொல்லி உள்ளார். ஏனென்றால் இந்திய வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்கள் திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள்.தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் இந்திய ராணுவம் அவர்களை திரும்ப விடமாட்டாது என எச்சரித்தார். தொடர்ந்து பாகிஸ்தானில் இது போன்ற சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருந்தால் அந்நாட்டை உடைக்க யாரும் தேவையில்லை.தானே துண்டு துண்டாக உடைந்து விடும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201905:05:00 IST Report Abuse
Nepolian S பாகிஸ்தான் இல்லை என்றால் உங்களுக்கு வேலை இல்லை.. பொருளாதாரம் ஆட்டம் போடுது அத பார்த்து சரிசெய்யுங்கோ
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-செப்-201923:01:01 IST Report Abuse
Nallavan Nallavan உண்மை ......
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
15-செப்-201913:56:04 IST Report Abuse
Raj இப்படிப்பட்ட வெத்து பேச்சை நிறுத்துவது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X