2022ம் ஆண்டுக்குள் புதிய பார்லி., கட்டடம்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி:பார்லிமென்டின், 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரை, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






டில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பார்லி., கட்டடம், ஜனாதிபதி மாளிகை, வடக்கு
மற்றும் தெற்கு பிளாக்குகள், 'இந்தியா கேட்' ஆகியவை, 1911 முதல், 1931 காலகட்டத்தில், ஆங்கிலேயர்களால்கட்டப்பட்டன.

தற்போது, பார்லி., உறுப்பினர்கள் எண்ணிக்கை, துறைகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
இதையடுத்து, பார்லி., கட்டடத்தை மறுசீரமைக்க அல்லது புதிய கட்டடத்தை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தப் பணி, அடுத்த ஆண்டு துவங்கி, 2022ல் புதிய பார்லி., கட்டடம் உருவாக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை செயலக அலுவலகங்களுக்கான புதிய கட்டடம், 2024ல் முடிவடையும் என, தகவல் வெளியாகி உள்ளது.இதற்கான பணிகளை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செய்து வருகிறது. புதிய கட்டடம் கட்டவும், தற்போதுள்ள கட்டடத்தை மறுசீரமைப்பு செய்யவும், சர்வதேச அளவிலான கட்டட வடிவமைப்பு நிறுவனங்களிடம், திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.






பார்லி.,யின், 2022ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை, புதிய கட்டடத்தில் நடத்த,
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-செப்-201921:06:49 IST Report Abuse
Bhaskaran நாட்டில் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் இருக்கு இப்போ நாடாளுமன்றத்துக்கு புது கட்டிடம் தேவையா ஐயா
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-செப்-201915:26:37 IST Report Abuse
J.Isaac அப்போதானே காவி கலர் அடிக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201914:13:58 IST Report Abuse
Pugazh V பாராளுமன்ற கட்டிடம் உள்ளே சென்று பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அங்கே 40% மேலான அறைகளில் கிடக்கும். தஸ்தாவேஜூகளையெல்லாம் தூக்கி எறியலாம். வேண்டாத ரெக்கார்ட் கள் ஏராளம். மேலும் கட்சி வாரியாக தனித்தனி. அலுவலக அறைகளும் தேவையில்லை. ஏராளமான க்ளெரிகல் ஸ்டாஃப் ஏன் என்று அவர்களுக்கே கூடத் தெரியாது. இந்த அதிகப்படியான ஃபைல்கள், ஊழியர்களை இடம் மாற்றினாலே, கிட்டத்தட்ட 30 - 40% கட்டி டம் காலியாகி விடும்
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
15-செப்-201917:03:11 IST Report Abuse
kumziஒரு தீவிரவாதியை எப்படி உள்ளே விட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X