துபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன்| Dubai-Like Annual Shopping Fest In 4 Cities From 2020: Finance Minister | Dinamalar

பொது செய்தி

இந்தியா

துபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (69)
Share

புதுடில்லி :ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக துபாயில் நடக்கும் ஷாப்பிங் திருவிழாவை போன்று இந்தியாவின் நான்கு நகரங்களில் நடத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.latest tamil newsபுதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றம் செய்ய உதவும் வகையில் ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் திருவிழாக்களை இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.


latest tamil newsஇந்த ஷாப்பிங் திருவிழா வரும் 2020 ம் ஆண்டு முதல் நடத்தப்படும். எனவும், இதற்கான நகரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் திருவிழாவில் கற்கள், நகைகள், ஜவுளி மற்றும் தோல் முதல் யோகா வரை மாறுபடும் எனவும் கூறினார்.

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்புக் குறைந்துள்ள நேரத்தில் இந்த நடவடிக்கைகள் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் நன்மைகளைத் தரும் .ஏற்றுமதி துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் முயற்சியில் இது உள்ளது என கூறினார்.

துபாயின் சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது, இந்த திருவிழா பெரும் தள்ளுபடிகள் மற்றும் அதிர்ஷ்ட போட்டிகளுக்கு பிரபலமானது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X