பொது செய்தி

இந்தியா

கார்த்தியின் ஆடிட்டரிடம் 18 மணி நேர விசாரணை

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகினறனர்.latest tamil news


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பாஸ்கர ராமனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடமும், இவரது மனைவி பத்மா பாஸ்கர ராமனிடமும் 18 மணி நேரம் நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். செப்.,19 ம் தேதியுடன் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைவதால், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாஸ்கர ராமனிடம் நடத்தப்படும் விசாரணை மிக முக்கியம் என அமலாக்கத்துறை கருதுகிறது.


latest tamil newsசிதம்பரத்தின் உதவியாளர் பெருமாளிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பாஸ்கர ராமனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன் தற்போது ஜாமினில் வெளியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
15-செப்-201918:25:52 IST Report Abuse
Poongavoor Raghupathy Kartik says his father along with him will come out safe from their charges within 20 days. This is because there are no cases against them and it is only a drama by CBI and ED to terrorize Chidambaram in the event of criticizing Modi in his actions by the Govt. But the Courts are not giving any relief to Chidambaram and he is put inside bar in jail. CBI and ED interrogating all associates of Chidambaram. What is actually the truth is not known to the Public. But it is certain that the truth will come out one day or other. An educated wealthy person like Chidambaram is it required for him.
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
15-செப்-201917:58:25 IST Report Abuse
thamodaran chinnasamy நடத்துங்கள் நாட்டு மக்களுக்கு இவர்களைப் பற்றி தெரிந்தால் சரி.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-செப்-201915:54:52 IST Report Abuse
Endrum Indian உலகில் உள்ள கடைந்தெடுத்த அறிவாளித்தனம் இது தான் அவனிடம் கோடி கோடியாக இருக்குமாம் அது எப்படி வந்தது என்று விசாரணை செய்து தெரிந்து கொண்டு???மிக மிக சிறிய போர்முலா உன் வருமானம் ஐ டி போரத்தில் 22 வயதில் என்ன இன்று என்ன இதன் இடையில் செய்த தொழில் வியாபாரம் என்ன???இவர்கள் ஒன்றும் அம்பானியோ அதனியோ பிர்லாவோ டாடாவோ இல்லை தானே??? இது போதாதா. 24 மணி நேரம் விசாரணை எல்லா சொத்தையும் அரசு கருவூலத்தில் முதலில் சேர்த்தது விடவேண்டும் அவ்வளவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X