மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்

Added : செப் 15, 2019
Advertisement
 மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது மிகவும் அமைதியாகிவிட்டார். தேவையில்லாமல், எந்த அரசியல்வாதியையும் அவர் விமர்சிப்பதில்லை.

முன்பெல்லாம், தினமும், பிரதமர், மோடியை கண்டபடி பேசி வந்தார்; பாஜக அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இப்போது அவர் 'கப்சிப்'.டில்லி மக்களுக்கு, இலவசமாக தண்ணீர், மின்சார கட்டணத்தில் சலுகை என, தினமும் திட்டங்களை அள்ளி வீசி வருகிறார். காரணம், அடுத்த ஆண்டு, பிப்ரவரியில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது தான்.மோடியை திட்டுவதால், எந்த பயனும் கிடையாது; மக்களின் அதிருப்திதான் மிஞ்சும் என்பதைப் கெஜ்ரிவால் புரிந்து கொண்டார்.

சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்த்த போது, கெஜ்ரிவால் மட்டும் மோடியை பாராட்டினார். மோடியைப் போலவே, கெஜ்ரிவாலும்அடிக்கடி விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டார். ஆங்கில மற்றும் ஹிந்தி நாளிதழ்களில், முதல் பக்கத்தில், கெஜ்ரிவாலின் படம் போட்ட நலத்திட்ட விளம்பரங்கள், தினமும் வெளியாகின்றன.'டிவி'க்களிலும், டில்லி அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்கள், கெஜ்ரிவால் படங்களுடன் மின்னுகின்றன. இதற்காக, தினமும், லட்சக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது.மோடியைப் பின்பற்றி, அவர் வழியில், விளம்பர மழையில் நனைகிறார் கெஜ்ரிவால்.


விஜயதசமியில் இறங்கும் 'ரபேல்'

சமீபத்தில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, காங்., முன்னாள் தலைவர், ராகுல், 'ரபேல் போர் விமானம் வாங்கியதில், மோடி ஊழல் செய்து விட்டார்; 30,000 கோடி ரூபாயை அனில்அம்பானி பாக்கெட்டில் போட்டுவிட்டார்' என, பேசினார்.இந்த பிரசாரம் எடுபடாமல், தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வியடைந்ததோடு, ராகுலும், தன் சொந்த தொகுதியான அமேதியில், தோற்றுப் போனார்.இப்படி பிரச்னைக்குள்ளான, பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும், ரபேல் போர் விமானம், மோடியின் பிறந்த நாளான, செப்டம்பர் 17ம் தேதி,இந்தியாவிற்கு வரும் என சொல்லப்பட்டது.அதில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும், அக்டோபர் மாதம், விஜயதசமியன்று, ரபேல் இந்தியாவிற்கு வருகிறது. இதற்காக, இந்திய விமானப்படை விமானிகள் பிரான்ஸ் நாட்டில், பயிற்சி பெற்று வருகின்றனர்.மத்திய பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்று, முதல் ரபேல் விமானத்தை சம்பிரதாயமாக பெற்றுக் கொள்வார். நம் நாடு, 36 விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்குகிறது. இதில், சில விமானங்கள் இந்த ஆண்டும், மீதி, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள்ளும் கிடைக்கும்.அக்டோபர் 8ம் தேதி, விஜயதசமி தினம். தவிர, அன்றுதான், இந்திய விமானப்படை தினமும் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம், ரபேல் போர் விமானம், இந்தியாவிற்கு வரும். ஹரியானாவில் உள்ள அம்பாலாவில், ரபேல் விமானங்கள்நிறுத்தி வைக்கப்படும் தளம் தயாராகி வருகிறது.அடுத்த மாதம், ஹரியானவில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த மாநிலத்தில், ரபேல் விமானங்களின் படைத்தளம் அமைக்கப்படுவது, தேர்தலில் பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X