இந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன?

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (138)
Advertisement

புதுடில்லி: இந்தி மொழி, ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி தினமாக நேற்று (செப்.,14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும்" என கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ., இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.அமித்ஷாவின் கருத்து குறித்து தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 1949 ம் ஆண்டு இந்தி மொழி, நாட்டின் அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டுதோறும் செப்.,14 ம் தேதி இந்தி தினம் (இந்தி திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகின்றன. தற்போது அமித்ஷா இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால் இந்தி வளர்ச்சி துறை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதன் காரணமாக இந்தி வளர்ச்சி குறித்து அமித்ஷா பேசி உள்ளார். ஆனால் அமித்ஷாவின் தாய்மொழி குஜராத்தி. குஜராத்தில் பிறந்தவரான பிரதமர் மோடி, டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, "உலகின் தொன்மையான மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ். அதனை அனைவரும் கற்க வேண்டும்" என கூறி இருந்தார்.


அமித்ஷா மட்டுமல்ல முந்தைய காங்., ஆட்சியின் போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், இந்தி தினத்தன்று இந்தியிலேயே உரையாற்றி உள்ளார். அத்துடன் ஆட்சி மொழியான இந்தியை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆனால் அப்போது காங்.,உடன் கூட்டணியில் இருந்த திமுக, சிதம்பரத்தின் பேச்சிற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. மாறாக மவுனம் காத்தது.

தமிழகத்தில் இந்தியை எதிர்ப்பதாகவும், தமிழ்...தமிழ் என முழக்கமிடும் திமுக.,வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், 2015 ல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நமக்கு நாமே நிகழ்ச்சியில் பேசிய போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உருது மொழியை கட்டாயமாக்க சட்டம் இயற்றப்படும் என பேசி இருந்தார். இந்தியை எதிர்க்கும் ஸ்டாலின், உருது மொழியை ஆதரித்து பேசியது திமுக.,வினர் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
19-செப்-201913:03:13 IST Report Abuse
chander இந்தியாவை ஒருங்கிணைக்க நீங்க ஆட்சியை விட்டு போனாலே போதும் சாமி
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
17-செப்-201909:28:21 IST Report Abuse
krish கோயில்களில், தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று போராடுகிறோம். சாடுகிறோம்., அப்பாவி அர்ச்சகர்களை வாட்டிவதைகின்றோம். தமிழில் அர்ச்சனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதே சமயம், நாம் பள்ளி வாசல்கள் ஒலிபெருக்கியிலிருந்து அல்லாஹு அக்பர். God is Great.اللهُ أَكْبَرُ Praise my Great Lord.سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمُ God listens to those who praise Him.سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ Praise my Loftiest Lord.سُبْحَانَ رَبِّيَ الأعْلَى Peace be on you and God’s Mercy and Blessings. என்று ஐந்து வேலை, தொழுகை அழைப்பு, தமிழ் தவிர்த்த அரேபிய மொழியில் விடுக்கும் காலத்தில், ஏன் மௌனம் சாதிக்கின்றோம்? கிறிஸ்துவ தேவலங்களில் பைபிள் ஆங்கிலத்தில் ஓதும் போதோ, அல்லது Our father, thou art in heaven, hallowed be thy name, thy kingdom....' என்று ஆங்கிலத்தில் ,மனதார, நெஞ்சார இறைவனை தொழும் போதும், அரேபிய, ஆங்கில அழைப்பு, உச்சரிப்பு நமக்கு புரியாவிட்டாலும், இனிமையாகத்தானே உள்ளது. இறைவின் மீதுள்ள நம்பிக்கையையும் அவர் கருணையையும் போற்றும்படிதானே நம்மை தூண்டுகிறது... இறைவன் எவ்விடத்திலும், எம்மொழியிலும் சஞ்சரிக்கின்றான் எனபதே நிதர்சனம். எனவே, விருப்பப்பட்டவர், கட்டாயம் தவிர்த்து, ஹிந்தி பயில்வதை நாம் தடுக்க, அல்லது எதிர்க்க முற்படவேண்டாம். அகத்தியன் தோற்றுவித்த செந்தமிழ் ஒரு காலத்திலும் அழியாது அம்மொழி காலத்தை வென்ற மொழி. தெய்விக மொழி. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் கிறிஸ்துவம், இஸ்லாம் நடக்க, பழக்க, செழிக்க உதவிய மொழி. வாழ்க செந்தமிழ், வளர்க மனித நேயம்- ஒற்றுமை, ஓங்குக உலகெங்கும் அணைத்து மக்கள் நலம் இணைந்து அவர்கள் இசைக்கும் இனிய மனித நேய, ஒற்றுமை போற்றும், சகிப்பு தன்மை ஊக்கும் அகில உலக தேசிய கீதம்.
Rate this:
Share this comment
Cancel
sundar - ,
16-செப்-201910:36:49 IST Report Abuse
sundar கடந்த ஆண்டு பிளஸ் 2 எழுதுணவங்க ஒன்பது லட்சம்.ஹிந்தி அஞ்சு லட்சம்.அதிகமாக ஹிந்தி படிக்கிறாங்க.இப்போ ஹிந்தி எதிர்ப்பு தேவையற்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X