இந்தியாவுடனான போரில் பாக்., தோற்கும்: இம்ரான் ஒப்புதல்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
Pak, conventional war, India, Imran Khan, Pakistan, Pakisthan, இம்ரான்,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் வழக்கமான போர் வந்தால், பாகிஸ்தான் தோல்வி அடையும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இம்ரான் கான், டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் ஒரு போதும் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்பதில் தெளிவாக உள்ளேன். இரண்டு அணுஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஈடுபட்டால், அந்த போர், பெரும்பாலும் அணுஆயுத போரில் தான் முடியும். வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார். இந்த போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வி அடையும்.


latest tamil news



போரில், ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று சரண் அடைவது. மற்றொன்று, உங்களின் சுதந்திரத்திற்காக மரணம் வரை போரிடுவது. இதில், பாகிஸ்தான், இரண்டாவது வாய்ப்பிற்காக தான் போராடும். ஓரு அணுஆயுத சக்தி நாடு மரணம் வரை போரிட்டால், அதனால், பல பின் விளைவுகள் ஏற்படும். இதனால் தான், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளையும் நாடுகிறோம். அவை தற்போது உடனடியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-செப்-201919:42:54 IST Report Abuse
Sampath Kumar அய்யா உங்க கவனத்துக்கு ஒரே கருத்தை சொல்ல விரும்புகிறான் ?/// என்ன ஏழாவுக்கு இந்த பாகி பாக்கி கிட்ட நாம மன்றாடனும் தூக்கி குப்பைதொட்டியில் போட ஏன் உங்கள்\ முடியாது ?
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
16-செப்-201911:19:35 IST Report Abuse
Natarajan Ramasamy இம்ரான் கான் எந்த நாட்டின் அதிபர்? இரண்டு நாடு போர்முலாவில் பிறந்தபோது இந்தியா, பாகிஸ்தான் நாடு இருந்தது. அது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரண்டும் சேர்ந்தது. அப்போது கிழக்கு பாகிஸ்தான் ஜனத்தொகையும் மேற்கு பாகிஸ்தான் ஜனத்தொகையும் 50, 50%. கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷ் ஆனா பின், இருப்பது மேற்கு பாகிஸ்தான் மட்டுமே. கிழக்கு பாகிஸ்தானுக்கு பங்களாதேஷ் என்று பெயர் மாறியபின் பாகிஸ்தான் பெயரும் மாறி இருக்க வேண்டும். அந்த பாதி நாட்டின் அதிபர் இம்ரான் கான். காஷ்மீர் பிரச்சினையை ஆரம்பித்த பாகிஸ்தான் இப்போது இல்லை. அதில் 50 % ஜனத்தொகை கொண்ட கிழக்கு பாகிஸ்தான்-பங்களா தேஷ் காஷ்மீர் வேண்டும் என்று கேட்கவில்லை. பங்களாதேஷ் ஐ UN அங்கீகரித்து உள்ளது. காஷ்மீர் பிரச்சினையை UN க்கு 1952 இல் எடுத்து சென்றது மேற்கு +கிழக்கு பாகிஸ்தான். எனவே மேற்கு பாகிஸ்தான்தனியாக இப்போது, 1952 வில் முழு பாகிஸ்தான் ஆரம்பித்த காஸ்மீர் பிரச்சினையை கிளற UN அனுமதிக்க கூடாது. ஏன் என்றால் பங்களாதேஷ் இன்று காஸ்மிரை உரிமைகொள்ள வில்லை. இன்று இருக்கும் பாகிஸ்தான், பிரிவினையை பொது அக்ரீமெண்ட் செய்த பாகிஸ்தான் இல்லை. எனவே இம்ரான் கான் 1952 ஐ எடுக்க UN எப்படி அனுமதிக்கலாம்? அப்படி செய்ய அவர்கள் ஈஸ்ட் பாகிஸ்தானின் (பங்களாதேஷ்)அனுமதி பெற வேண்டும்.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-செப்-201910:10:15 IST Report Abuse
Chowkidar NandaIndia என்ன இம்ரான், இப்படி உண்மையை சொல்லி இங்கிருக்கும் உங்கள் ரசிகர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சி விட்டீர்களே. இதை எப்படி தாங்குவார்கள் இங்கிருக்கும் உங்கள் அல்லக்கைகள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X