அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் எம்.பி.,க்கள்; எச்சரிக்கை மீறி பிடிவாதம்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி: மக்களவை குடியிருப்பு கமிட்டியின் எச்சரிக்கையை மீறி 82 முன்னாள் எம்.பி.,க்கள் அரசு குடியிருப்பை காலி செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.






ஆகஸ்ட் 19ல் சி.ஆர்.பாட்டில் தலைமையிலான மக்களவை குடியிருப்பு கமிட்டி, அரசு குடியிருப்பை காலி செய்யாத சுமார் 200 முன்னாள் எம்.பி.,க்கள் ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மூன்று நாட்களில் தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

கமிட்டியின் எச்சரிக்கையை தொடர்ந்து பெரும்பாலானவர்கள் காலி செய்தனர். ஆனால் அந்த பட்டியலில் உள்ள 82 பேர் மட்டும் காலி செய்யவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

எம்.பி.,க்கள் காலி செய்வது மக்களவை குடியிருப்பு கமிட்டியின் முடிவாகும். அரசு குடியிருப்பை காலி செய்ய மறுப்பவர்கள் மீது பொதுச்சொத்துகள் ஆக்கிரமிப்புச் சட்டப்படி கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான உத்தரவு வெளியானால், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்படும் அதையும் மீறி, சிலர் காலி செய்யாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
2014ம் ஆண்டே இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.






விதி என்ன சொல்கிறது


விதிப்படி, மக்களவை எம்.பி.,யாக இருந்தவர்கள் அடுத்த ஆட்சி அமையும் போது, தங்கள் குடியிருப்பை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்.

2வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னும் முன்னாள் எம்.பி.,க்கள் பலர் காலி செய்ய மறுக்கின்றனர். இதனால் தற்போதைய ஆட்சியில் புதிதாக தேர்வான எம்.பி.,க்கள் தற்காலிக குடியிருப்பில் இருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
15-செப்-201923:09:45 IST Report Abuse
orange mittai ஏதாவது பேய் பூதம் இருக்குனு சொல்லி விரட்டுங்க....sorry அவங்களே ஓடிடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
15-செப்-201921:36:55 IST Report Abuse
Balasubramanian அவர் எந்த தொகுதியை சார்ந்தவரோ, அந்த தொகுதியில் அவர் சார்ந்த கட்சியும், மற்றும் எந்த தொகுதியிலுமே அவரும் அடுத்த தேர்தல் முடியும் வரை போட்டியிட முடியாது என்று சொல்லி பாருங்கள். துண்டை காணோம் துணியைக் காணோம் என்பது போல காலி செய்து விட்டு ஓடிவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
15-செப்-201921:26:02 IST Report Abuse
Nalam Virumbi லத்தியால அடிச்சு வெளியேத்துங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X