பொது செய்தி

இந்தியா

2000 முறை அத்துமீறிய பாக்.,; இந்திய குற்றச்சாட்டு

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019
Advertisement

புதுடில்லி: இந்த ஆண்டில்(2019) எல்லையில், இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.






இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இந்திய நிலைகள் மீதும், தாக்குதல் நடத்தி வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலையை தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சர்வதேச மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த, 2003ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் இந்திய ராணுவம், பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதுடன், பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் எழுப்ப முயற்சித்த பாகிஸ்தானுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. எந்த நாடும் அதனை ஆதரிக்க முன் வரவில்லை. இதனையடுத்து, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பில், காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டியது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவ செய்ததை விளக்கமாக எடுத்து கூறியது. இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X