பீரங்கி குண்டை வெடிக்க செய்த ராணுவத்தினர்

Added : செப் 15, 2019
Share
Advertisement

பாலகோட்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் கிடந்த பீரங்கி குண்டை ராணுவ வீரர்கள் செயலிழக்க செய்தனர்.

குடியிருப்பு பகுதிக்கு அருகே கிடந்த பீரங்கிக் குண்டை மீட்ட ராணுவ வீரர்கள், பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். பூஞ்ச் மாவட்டம் மெந்தர் அருகே பாலகோட் என்ற கிராமத்தில், சிறிய ரக 120 எம்.எம். பீரங்கி குண்டு ஒன்று கிடந்தது. இதை கண்ட அந்த ஊர் மக்கள், ராணுவ வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வீரர்கள், பீரங்கி குண்டை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அதன் மீது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்பாக வெடிக்கச் செய்து செயலிழக்க செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X