பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி கூக்குரல்: முதல்வர் பாராட்டு

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித், முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, தமிழ் மாநில காங்., தலைவர் வாசன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ், அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் இபிஎஸ் பேசியதாவது:


நிழல் தரும் மரங்களை வளர்ப்பதும் காப்பதும் நமது கடமை. நாட்டின் கலாசாரத்தில் மரம் இன்றியமையாதது, மரங்களை தெய்வமாக வழிபடுவது நமது கலாசாரம். மாநிலத்தில் பசுமை போர்த்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண்துறை மூலம் 2.5 கோடி பனை விதைகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி கூக்குரல் இயக்கம் மூலம் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது பெருமைக்குறியது.


ஓபிஎஸ் பேசியதாவது:


கால நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவிற்கே வழிகாட்டியாக மரங்களை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மரத்தை நம்பிதான் பருவமழை, நிலத்தடி நீர் அனைத்துமே இருக்கிறது. சத்குரு என்றாலே பிரமாண்டம் தான். ஆன்மிக பணியில் காண்பித்த பிரமாண்டத்தை தற்போது மக்கள் பணியில் காட்டி வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மனிதரில் புனிதரான சத்குரு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சத்குரு பேசியதாவது:


உலகிலேயே அதிகம் மண்வளம் நிறைந்த தென்இந்தியாவை தற்போது பாலைவனமாக மாற்றி வருகிறோம். காவிரியை மீட்பதன் மூலம் தமிழகம், கர்நாடக மக்கள் மீண்டும் சகோதரர்கள் ஆவார்கள். தமிழகம் செல்வம் நிறைந்த மாநிலம். கிருஷ்ணா, கோதாவரியை தேடி நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
16-செப்-201900:22:22 IST Report Abuse
Raj ஆன்மீக ஆட்டம் எவ்வளவு நாளைக்கோ....மரம் வளர்ந்தா சரி தான். யானை மட்டும் இருக்க கூடாது இல்லையா ? ஒரு 100 யானை சேத்து வளர்த்துங்கள்..அதுவே வனத்தை பெருக்கி விடும். போலி சாமியாரை நம்பினால் கடவுள் கூட காப்பாத்த முடியாது. சிறந்த உதாரணம் நித்தி.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201921:10:27 IST Report Abuse
Pugazh V வெறும் விளம்பரம். 242 கோடி மரங்கள் என்பதெல்லாம் டுபாக்கூர் நம்பர். நம்புகிற மாதிரியா இருக்கிறது?
Rate this:
Share this comment
agni - chennai,இந்தியா
15-செப்-201922:52:36 IST Report Abuse
agniவிவசாயிகள் பயிர்வளப்போடு மரங்களையும் பயிரிட்டு (agro forest )வன விவசாயம் செய்தார்களெனில் இது சாத்தியம் தான்....
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
15-செப்-201919:31:27 IST Report Abuse
Naga பலே பிலே சத்குரு சார் கார்ல போறிங்க, ஸ்போர்ட்ஸ் பைக்கில போறிங்க, வித விதமா டிரஸ் போடுறிங்க பலே பலே டுமாகுர் ஆண்மிகவாதிதான் அடிகடி காஸ்டிமா மாத்துவாங்க, என்னா இந்த அரசுக்கு மரம் நட தெரியாதா, அப்ப என்னா புடுகுறானுங்க.
Rate this:
Share this comment
bala - Tirunelveli,இந்தியா
16-செப்-201919:03:37 IST Report Abuse
balaபகுத்தறிவாதிகள் கிட்ட இந்த கேள்வியை கேளுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X