ராணுவத்தில் இறந்த நாய் : ராஜ்நாத் சிங் இரங்கல்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ராஜ்நாத்சிங், இரங்கல், மோப்ப நாய், ராணுவம், அஞ்சலி

புதுடில்லி : ராணுவத்தில் பணியாற்றி இறந்த நாய்க்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் கடந்த 9 வருடங்களாக 'டச்' என்ற நாய் பணியாற்றி வந்தது. செப்., 11ல் இந்த மோப்ப நாய் இறந்தது. இந்த நாயின் இழப்பு ராணுவத்தினரிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்.,14) டுவிட்டர் பக்கங்களில் ராணுவ உயரதிகாரிகள் பலரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை நாயின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு அதன் பெருமைகளைக் கூறி பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''பல்வேறு சிஐ/சிடி ஆப்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் ராணுவத்தின் கருவியாக செயல்பட்டு வந்தது டச்சு நாய். கிழக்கு கட்டளைப் பிரிவில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த டச்சு நாய் ராணுவத்தினருக்கு மிகவும் உதவியாக இருந்து ராணுவத்தை பெருமைப்படுத்தியுள்ளது. டச்சு நாயின் இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-201919:24:22 IST Report Abuse
RajanRajan DUTCH IS A GREAT ACHIEVER. DEDICATED PEOPLE REFLECTED THEIR HUMAN FACE ON THIS DUTCH. THIS IS A GREAT BRAIN IN THE FORM OF DOG & TO PRAY FOR THE BEST.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X