கோதாவரி ஆற்றில் படகு விபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

ஐதராபாத்: ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. படகில் அதிக பாரம் ஏற்றியதால் இந்த விபத்து நடந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.






ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தேவிபட்டனம் கண்டி போச்சம்மா கோவிலுக்கு படகு சவாரி இயக்கப்பட்டது. ஆற்றில் 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும்போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் பாதுகாப்பு உடைகள் இல்லாதால் பலர் தண்ணீரில் மூழ்கினர். இதனால் கோதாவரி ஆற்றில் தற்போது படகு சேவையை நிறுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


11 பேர் பலி


தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பலர் மாயமாகியுள்ளதால் தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கடற்படை ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







ரூ.10 லட்சம் இழப்பீடு


கோதாவரி ஆற்றில் படகு விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.




Advertisement




மோடி இரங்கல்


கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது: ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவிக்கிறேன். சோக நிகழ்வு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.










ராஜ்நாத் சிங் இரங்கல்


இந்த படகு விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் கூறுகையில், ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததால், விலைமதிப்பற்ற பல உயிர்களின் இழப்பு ஆழ்ந்த வேதனையை தருகிறது. இறந்தவரின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டார்.







மம்தா இரங்கல்


இந்த விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். காணாமல் போனவர்களை உயிருடன் மீட்க நான் இறைவனை வேண்டுகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
16-செப்-201910:19:57 IST Report Abuse
pattikkaattaan /// ஆற்றில் 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும்போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் பாதுகாப்பு உடைகள் இல்லாததால் பலர் தண்ணீரில் மூழ்கினர்./// விபத்திற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு குறைபாடு .. மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை யாரும் உணர்வதில்லை
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-செப்-201920:30:09 IST Report Abuse
mindum vasantham Ivvidathil atrin akalam 2.5 km mel irukkum neechal theriyavittaal thappippathu kadinam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X