அவசர எண்ணில் பீட்சா : போலீசார் வருத்தம்| Dinamalar

அவசர எண்ணில் பீட்சா : போலீசார் வருத்தம்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (2)
அவசர உதவி, எண், 1512, அழைப்பு, வருத்தம், டில்லி போலீசார், பீட்சா, ரீசார்ஜ்

புதுடில்லி: அவசர எண்ணுக்கு போன் செய்து பீட்சா போன்ற உணவுகளை பொதுமக்கள் கேட்பதாக டில்லி ரயில்வே போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணத்தின்போது பொதுமக்கள், அவசர உதவிக்காக அல்லது ஏதேனும் அவசர தேவையின் காரணமாக 1512 என்ற அவசர எண்ணுக்கு போன் செய்து போலீசாரிடம் உதவி கேட்கலாம். ஆனால் தற்போது இந்த அவசர எண்களில் பொதுமக்களில் பலர் தொடர்பு கொண்டு, பீட்சா வேண்டும், ஜூஸ் வேண்டும், மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என் கூறுவதால் டில்லி போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒருநாளைக்கு சராசரியாக வரும் அழைப்ப்புகளில் பாதிக்கும் மேல் இந்த மாதிரியான ஏமாற்றம் அளிக்கும் அழைப்புகளாக இருப்பதால் இந்த அவசர உதவி இயக்கத்தின் நிலைப்பாடு மாறுவதாய் உள்ளது. பொதுமக்களிடம் அவசர உதவிக்கான எண் குறித்து விழிப்புணர்வு இல்லை. சிலர் ரயில் நிலையம் வர தாமதம் ஆகிறது. ரயிலை சற்று நிறுத்துங்கள் என்றும் கூறுகின்றனர்.

பொதுமக்கள் குற்றங்கள் ஏதேனும் நடந்தால் மட்டும் அவசர உதவிக்கு அழைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X