காஷ்மீர் பிரகாசிக்க வேண்டும்: கவர்னர் சத்யபால் மாலிக்

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஸ்ரீநகர் : காஷ்மீர் கவர்னராக தான் பதவியேற்றபோது ஜம்மு காஷ்மீரை பிரகாசிக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.






மோடி அரசின் செயல்பாட்டால் ஜம்மு காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து, தீவிரவாத தாக்குதல் போன்ற பல முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுகுறித்து கவர்னர் சத்யபால் மாலிக் பேசுகையில், மாநிலம் சிறப்பான வளர்ச்சி அடைந்தால், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் எல்லைத் தாண்டி இங்கு வர விரும்புவார்கள். இதுதான் தாங்கள் விரும்பிய காஷ்மீர் என அவர்கள் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் , காஷ்மீர் புதுப்பொழிவு பெற்று பிரகாசிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி என்னிடம் கூறியிருந்தார்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்துக்கு பிறகு மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்குமாறு வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அவர்களுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறது. காஷ்மீரிலும் மற்ற மாநிலங்களை போல், மக்களுக்கு பல சலுகைகளையும், மக்களின் வாழ்விற்கு தேவையான முன்னேற்ற நடவடிக்கைகளையும் அரசு செய்ய காத்திருக்கிறது.





மத்திய அரசிடம் நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். இன்று மொத்த இந்தியாவும் உங்களுக்குச் சொந்தம். அதனால் எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும். அத்துடன் காஷ்மீர் விவசாயிகளை அச்சுறுத்துபவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அவர்கள் தங்களின் நடவடிக்கையை மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நாங்கள் விவசாயிகளுக்கும், வாங்குபவர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்குவோம் என்றார்.





நாட்டில் எந்த மாநிலத்துக்கும் வழங்காத வகையில் இந்த ஆண்டு மட்டும் காஷ்மீருக்கு 8 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து விரைவில் 4 ஆயிரத்து 500 மருத்துவர்களும் நியமிக்கப்படவுள்ளனர். முந்தைய ஆட்சியை விட தான் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anjali - chennai,இந்தியா
16-செப்-201911:55:35 IST Report Abuse
Anjali தீவிரவாதிகள் சிறிதுகாலம் மக்களை மெரட்டலாம் ஆனால் இது வெகு காலம் நீடிக்காது, இந்தியா அவர்களை கண்டிப்பாக அழித்துவிடும், காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழும் காலம் வந்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-செப்-201903:36:37 IST Report Abuse
blocked user தீவிரவாதிகளை முழுவதுமாக இந்திய மண்ணில் இருந்து ஒழித்துக்கட்டி விட்டால் சாத்தியமே.
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
16-செப்-201904:18:20 IST Report Abuse
blocked user"சத்யபால்" சாத்தியபால் மாலிக்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X