பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் உற்பத்தி அதிகரிப்பு குறித்த மண்டல கலந்தாய்வு

Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement

விழுப்புரம்: தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, வேளாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் வேளாண்மை இணை இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், உணவு தானிய உற்பத்தி பணியில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நடைமுறைபடுத்த வேண்டிய பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி, ஆய்வு மேற்கொண்டார்.கூட்டத்தில், வேளாண்மை கூடுதல் இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) சங்கரலிங்கம், வேளாண்மை இயக்குநரக வேளாண்மை இணை இயக்குநர் (மாநில திட்டம்) கார்த்திகேயன் மற்றும் வேளாண்மை இயக்குநரக அலுவலர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் ராமசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-செப்-201908:32:51 IST Report Abuse
Bhaskaran நீங்க கூடிப்பேசி என்னப்பயன் விவசாயிகளை அழைத்து அவர்களுக்கு இன்றய விவசாய தொழில்நுட்பம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு போன்றவற்றை எடுத்து சொல்லவேண்டாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X