பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளியம்மை மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

Added : செப் 15, 2019
Advertisement

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

திருக்கோவிலூர் வள்ளியம்மை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி விழா அரங்கில் நடந்தது. கல்லூரி துணை முதல்வர் தென்னரசு வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாபு ஆண்டறிக்கை வாசித்தார்.தகடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, கல்லூரி அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் வினோத், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பத்மினி, சிவகங்கை அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முரளி முன்னிலை வகித்தனர்.கல்லூரி நிர்வாகி பூபதி தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் அருண் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 233 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, வாழ்த்திப் பேசினார்.நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X