பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் எஸ்.டி.பி.ஐ., கட்சி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

Added : செப் 15, 2019
Advertisement

செஞ்சி: செஞ்சி என்.ஆர்.பேட்டை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என, எஸ்.டி.பி.ஐ., கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கோரி்க்கை வைத்துள்ளனர்.

செஞ்சி தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடந்தது. தொகுதி தலைவர் குரைஷி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசேன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக் வரவேற்றார்.மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் அப்துல் கரீம், கள்ளக்குறிச்சி அப்துல் மாலிக் சிறப்புரை நிகழ்த்தினர்.கூட்டத்தில், செஞ்சி என்.ஆர்.பேட்டை பகுதியில் நடந்து வரும் தொடர்திருட்டை தடுக்க தனிப்படை அமைத்து எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும், செஞ்சி நகரம், எம்.ஜி.ஆர்., நகர், என்.ஆர்.பேட்டை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள், நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள், பள்ளி சிறுவர்களை துரத்தி சென்று கடிப்பதால், நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சாதிக் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X