பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதியின்றி செயல்படும் ரிஷிவந்தியம் வார சந்தை: அதிகாரிகள் நடவடிக்கை தேவை

Added : செப் 15, 2019
Advertisement

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் வார சந்தையில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ரிஷிவந்தியத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை வார சந்தை நடைபெறுகிறது. பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்களது காய்கறிகள், கீரை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் நிலையம் முன் இடம் தேர்வு செய்யப்பட்டு கடைகளுக்கான சிறிய அளவில் கடைகள் கட்டப்பட்டன. வியாபாரிகளின் வசதிக்காக குடிநீர், கழிவறை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இயங்கியது.ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் உள்ளது. சந்தைக்கு பின்புறம் குப்பைகளையும், அழுகிய பொருட்களையும் கொட்டுகின்றனர். மேலும் சிலர் இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.அங்குள்ள கழிவறைக் கட்டடத்தில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால், இயற்கை உபாதைக்கு கூட இடமின்றி வியாபாரிகள், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.வார சந்தை கடைகளில் ஒரு சில இடங்களில் தரை உடைந்திருப்பதாலும், அதிகளவு துார்நாற்றம் வீசுவதாலும் கட்டடத்தை பயன்படுத்தாமல், சாலையோரம் தார்பாய் மூலம் மேற்கூரை அமைத்தும், திறந்த வெளியில் கடைகளை வைக்கின்றனர்.போதுமான வசதிகளை செய்து தராமல், வியாபாரிகளிடமிருந்து பணம் மட்டும் வசூலிக்கின்றனர். வசூலிக்கும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை என்று வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.வார சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X