கட்சி பதவிகளில் விசுவாசிகளுக்கு சோனியா முக்கியத்துவம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
Congress,காங்.,கட்சி,பதவி,விசுவாசி,சோனியா,முக்கியத்துவம்

புதுடில்லி : பல்வேறு மாநிலத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை மாற்றுவது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன், காங்., தலைவர் சோனியா ஆலோசனை நடத்தி வருகிறார். நீண்ட காலம் கட்சியில், விசுவாசமாக உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்க, அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். அப்போது, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும், தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள, சோனியா, காலியாக உள்ள கட்சி பதவிகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


அதிருப்தி


மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கே அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுவதாக, மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதையடுத்து, கட்சியில் நீண்டகாலமாக, விசுவாசமாக உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்க, சோனியா முடிவு செய்துள்ளதாக, காங்., வட்டாரம் தெரிவித்துள்ளது. இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: ஹரியானாவில் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், மாநிலத் தலைவராக இருந்த, அசோக் தன்வாருக்கு பதிலாக, குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டுள்ளார். 'தன்வாரை நீக்காவிட்டால், தனிக்கட்சி துவக்குவேன்' என, முன்னாள் முதல்வர், புபிந்தர் சிங் ஹூடா கூறியிருந்தார்.

அவரை சமாதானப்படுத்தும் வகையில், சட்டசபை கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் மஹாராஷ்டிராவில், மும்பை தலைவராக இருந்த, மிலிந்த் தியோரா, ராஜினாமா செய்திருந்தார். மூத்த தலைவரான, ஏக்நாத் கெயிக்வாட், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத் தலைவரான, சுனில் ஜாக்கரின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு நெருக்கமான இவரை, மாநிலத் தலைவராக தொடரும்படி, சோனியா கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, மூத்த தலைவர், ராமேஸ்வர் ஓரான், மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, கட்சியில் நீண்டகாலம் உள்ளவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, உத்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேச மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதைத் தவிர வேறு சில மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனையில், சோனியா ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
16-செப்-201922:02:58 IST Report Abuse
Subburamu Krishnaswamy It will be very difficult to eliminate bonded labour and slavery in India.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-செப்-201920:12:42 IST Report Abuse
தமிழ் மைந்தன் என்ன வேட்டையாட ரெடியா?......இனி வேட்டையாட பாகிஸ்தான்தான் போக வேண்டும்.....
Rate this:
Cancel
Deva -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201919:58:05 IST Report Abuse
Deva Thats why your family members still maintain leader post Why never give to someone Your party almost died still u talk about politics
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X