போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி தாக்குதல்: பாக்., சேட்டை

Updated : செப் 17, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (3+ 61)
Advertisement
Pakistan,India,பாக்., சேட்டை, போர் ஒப்பந்தம், தாக்குதல், அத்துமீறல்

புதுடில்லி : 'பாகிஸ்தான், இந்தாண்டில் மட்டும், இதுவரை, 2,050 முறை, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், நம் தரப்பைச் சேர்ந்த, 21 பேர் உயிரிழந்துள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்ற, பாகிஸ்தான் அரசு முயற்சித்தது.


தோல்வி


ஐ.நா.,விலும், பல் வேறு சர்வதேச அமைப்புகளிடமும், 'காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இந்த விஷயதத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்' என, வலியுறுத்தியது. பாக்,, பிரதமர், இம்ரான் கான், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி மற்றும் அந்த நாட்டுக்கான, ஐ.நா., பிரதிநிதிகள், இது தொடர்பான பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பிடமும், இது குறித்து இவர்கள் புகார் அளித்தனர். ஆனால், ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதிகளும், வெளியுறவு துறை அதிகாரிகளும், பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடித்தனர். இதனால், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, பாக்., எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரில், இந்திய படைகளால் மனித உரிமைகள் மீறப்படுவதாக, பாக்., பொய் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், சர்வதேச எல்லையில், பாக்., படையினர் தான், மனித உரிமைகளை மீறி, தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த, 2003ல், இந்தியா - பாக்., இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை, பாக்., முறையாக பின்பற்றுவது இல்லை.

இந்தாண்டில் மட்டும், பாக்., படையினர், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இதுவரை, 2,050 முறை தாக்குதல் நடத்தியுள்னளர். இதில், நம் தரப்பில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி, எல்லையோர கிராமங்களில் வசிக்கும் அப்பாவி மக்களும், பாக்., படையினரின் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாக்., படையினர், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறினாலும், இந்திய படையினர், தொடர்ந்து, பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்கின்றனர். பாக்., அரசின் இந்த இரட்டை வேடத்தை, சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்துவோம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


பாக்., திடீர் பல்டி


காஷ்மீர் விவகாரத்தை வலியுறுத்தி, இந்திய எல்லைப் பகுதியை நோக்கி, பாக்., அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.


ஒத்தி வைப்பு


இதற்கிடையே, பாக்., பிரதமர் இம்ரான் கான், வரும், 27ல், ஐ.நா., பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். அதுவரை, பேரணியை ஒத்தி வைப்பதாக, அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் தெரிவித்துள்ளன.


பாகிஸ்தான் சிதறும்: அமைச்சர் எச்சரிக்கை


ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், குஜராத் மாநிலம், சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: பாகிஸ்தான் அரசு, பிரச்னைகளை நிதானமாக கையாள வேண்டும். ஏற்கனவே, அவர்கள் செய்த தவறுகளால் தான், 1971ல், அந்த நாடு, இரண்டாகப் பிரிந்தது; இதை, அவர்களால் தடுக்க முடியவில்லை. தற்போது, மீண்டும் தவறு செய்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் உடைந்து, சிதறும்; இதை, யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார் .


கடை உரிமையாளர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்


ஜம்மு - காஷ்மீரில் வன்முறை சம்பவங்களை தவிர்க்க, அரசு, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீநகரில், 12க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், சுதந்திரமாக உலா வருவதாகவும், அவர்கள், கடைகளின் உரிமையாளர்களை மிரட்டி, கடைகளை அடைக்கும்படி கூறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர், டி.ஜி.பி., தில்பக் சிங் கூறுகையில், ''பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் தகவலில், ஓரளவு உண்மை இருக்கலாம்; ஆனால், பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருவதாக கூறுவது, மிகைப்படுத்தப்பட்ட தகவல்,'' என்றார்.

'கடும் விளைவு ஏற்படும்'
பாக்., பிரதமர், இம்ரான் கான், தனியார், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே முழுமையான போர் நடந்தால், அதில், பாகிஸ்தான் தோற்கலாம். ஆனால், அதற்கு பின் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதை, இந்தியா உட்பட யாரும் மறந்து விடக் கூடாது. அணு ஆயுத சக்தி உள்ள இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அது, இறுதியில், அணு ஆயுத போராகத் தான் முடிவடையும். போரில், ஒரு நாட்டுக்கு தோல்வி ஏற்பட்டால், அந்த நாட்டிற்கு, இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன.

ஒன்று, எதிரியிடம் சரண் அடைவது, அடுத்தது, இறுதி வரை சுதந்திரத்துக்காக போராடுவது ஆகிய வாய்ப்புகள் உள்ளன. அணு ஆயுதம் உள்ள பாகிஸ்தான், இறுதி வரை சுதந்திரத்துக்காக போராடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3+ 61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
16-செப்-201910:13:27 IST Report Abuse
சுந்தரம் சென்ற ஆண்டு 2200 தடவை என்று புள்ளி விபரம் சொன்னார்கள். இந்த ஆண்டு இதுவரை 2,050 முறை என்று புள்ளி விபரமும் சொல்கிறார்கள். கூடவே பாகிஸ்தானுக்கு வாலாட்டினால் வாலை நறுக்குவோம் என்று எச்சரிக்கை என்றும் சொல்கிறார்கள். பாடம் புகட்டுவோம் என்கிறார்கள். எல்லாமே .. எப்போதுதான் செயலில் நாம் காட்டப்போகிறோம்?
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
16-செப்-201921:46:34 IST Report Abuse
blocked userமுன்னால் போனால் கடிப்பது, பின்னால் போனால் உதைப்பது போன்ற கேவலமான அணுகுமுறையை உங்களைப்போன்ற அதி மேதாவிகள் கை விடவேண்டும்... தாக்கினால் - ஆதாரம் வேண்டும்... தாக்கவில்லை என்றால் ஏன் தாக்கினீர்கள்?...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-செப்-201903:40:20 IST Report Abuse
blocked user திவாலாகும் நிலை என்று சொல்லிக்கொண்டு 2050 முறை தாக்கி இருக்கிறார்கள் என்றால் எப்படிப்பட்ட ஒரு வெறுப்பு இருக்கும்? ஆகவே இவர்களை விட்டு வைப்பது இந்தியாவுக்கு ஆபத்து. முழுவதுமாக ஒழித்துக்கட்டவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X