விதி மீறுவோருக்கு அபராதம் இல்லை: தவறுகளை திருத்த உதவும் போலீசார்

Updated : செப் 16, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
போக்குவரத்து, விதிமீறல், தவறு, போலீஸ், திருத்தம், அபராதம், தெலுங்கானா, நூதன முறை

ஐதராபாத் : போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு, பெருமளவில் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், ஐதராபாத் போலீசார் நுாதன முறையில், அவர்களின் தவறை திருத்த உதவி செய்கின்றனர்.

மோட்டார் வாகன திருத்த சட்டம், நாடு முழுவதும், கடந்த, 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு, இந்த சட்டத்தின் படி, பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. இதற்கு, மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


சான்றிதழ்


முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கும் தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதில்லை; மாறாக, அவர்களின் தவறுகளை போலீசார் திருத்துகின்றனர். இது பற்றி போலீசார் கூறியதாவது: ஹெல்மெட் அணியாமல், உரிமம், மாசு கட்டுப்பாடு சோதனை சான்றிதழ், காப்பீடு ஆகியவை இல்லாமல், வாகனங்களை ஓட்டிச் செல்வது, போக்குவரத்து விதிமீறல்களில் அதிகமாக உள்ளன.

ஹெல்மெட் அணியாமல், வாகனங்களை ஓட்டிச் செல்வோரை நிறுத்தி, அவர்களிடம் பணம் வாங்கி, ஹெல்மெட் வழங்குகிறோம். இதேபோல், ஓட்டுனர் உரிமம், காப்பீடு, மாசு சான்றிதழ் இன்றி, வாகனங்களை ஓட்டிச் செல்வோருக்கு, உடனடியாக, 'ஆன்லைன்' வழியாக, அவற்றை வாங்குவதற்கு உதவி செய்கிறோம்.


நடவடிக்கை


விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்காமல், அவர்களை விதிகளை பின்பற்ற செய்வதற்கான, நடவடிக்கைகளை எடுக்கிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
19-செப்-201911:06:18 IST Report Abuse
ganapati sb thodaratum intha pokuvarathu vithimurai meerum makkalidam vilipunarvai undakum paaratukuriya seyal
Rate this:
Cancel
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
16-செப்-201921:39:43 IST Report Abuse
Rasu Kutty மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது... அபராதம் தான் ஒரே வழி... அபராதத்தை குறைப்பதும் மண்டியிட்டு ... விடுவதும் ஒன்றே.....
Rate this:
Cancel
16-செப்-201918:02:47 IST Report Abuse
கதை சொல்லி போக்குவரத்து விதிகளே இல்லாமல் ஆக்கிவிட்டால்... சட்டங்களும் இல்லை, அபராதங்களும் இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X