சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடலால் மீனவர்கள் அவதி

Added : செப் 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராமேஸ்வரம், மீனவர்கள், கடல், உள்வாங்கியது, அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று (செப்.15), திடீரென கடல் உள்வாங்கியதால், மீன்களை கரையில் இறக்க முடியாமல், மீனவர்கள் சிரமம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்தம் அருகே, தென் கடற்கரையில், நேற்று அதிகாலை, திடீரென, 200 மீட்டர் கடல் உள்வாங்கியது. கடலோரத்தில் உள்ள பாசிகள் வெளியில் தெரிந்தும், தண்ணீரின்றி, கடல் சிப்பிகள் கரையில் தத்தளித்தன.மேலும், நேற்று மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள், விசைப்படகில் இருந்து, சிறிய ரக படகில் இறக்கிய மீன்களை, கரைக்கு கொண்டு வர முடியாமல் அவதிப்பட்டனர். பகல், 2:00 மணிக்கு பின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததும், கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.மீனவர் ஒருவர் கூறுகையில், 'தற்போது, தென் மேற்கு காற்று வீசுவதால், திடீரென கடல் உள்வாங்கி, மதியத்திற்கு பின், கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். இது வழக்கமாக நடக்கக் கூடியது. இதனால், படகில் இருந்து மீன்களை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-201908:11:44 IST Report Abuse
ருத்ரா கடல் உள் வாங்கினா நீர் மீண்டும்வர தாமதமானால் நீர் நிலைகள் பிளாட்டுகளாக மாறிவிடும் அலைகளே திரும்ப வாருங்கள்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-செப்-201900:28:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உள்வாங்குனா அவதி, பொங்கினா அவதி.. இதுக்கு தான் கடலுக்குள் பாலம் கட்டி அங்கிருந்து படகுகள் செல்ல ஒரு படகுதுறை கட்டவேண்டும். காலாவதியான கமிஷன் அரசுக்கு இப்போ புதுசா வெளிநாடு சுத்துற ஜோலி தான் முக்கியமா இருக்கு.,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X