காலி செய்யாத மாஜி எம்.பி வீடுகளுக்கு பவர் கட்

Updated : செப் 16, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
MP,மாஜி,எம்.பி, வீடுகள், பவர் கட், குடிநீர், எரிவாயு இணைப்பு

புதுடில்லி : மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் முன்னாள் எம்.பி.க்கள் 82 பேர் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக வெளியேறும்படி 'நோட்டீஸ்' வழங்குவதுடன் அந்த பங்களாவுக்கான மின்சாரம், குடிநீர், சமையல் 'காஸ்' இணைப்புகளை துண்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் வென்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. அரசு மீண்டும் அமைந்தது. மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 200க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். லோக்சபா எம்.பி.க் களுக்கு டில்லியில் அரசு பங்களா, அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும். லோக்சபாவின் பதவிக் காலம் முடிந்த ஒரு மாதத்துக்குள் இவர்கள் அந்த குடியிருப்பை காலி செய்ய வேண்டும். கடந்த 2014ல் நடந்த தேர்தலில் வென்று எம்.பி.க்களாக பதவியேற்றவர்களில் 200க்கும் மேற்பட்டோர் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்தனர்.

அவர்கள் காலி செய்தால் தான் புதிதாக பதவியேற்றுள்ள எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்க முடியும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16வது லோக்சபாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததாக இந்தாண்டு மே 25ல் அறிவித்தார். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருந்தனர். அதைத் தொடர்ந்து சி.ஆர்.படேல் தலைமையிலான லோக்சபாவின் அரசு குடியிருப்பு ஒதுக்கீட்டு குழு கடந்த மாதம் 19ம் தேதி இவர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' அனுப்பியது.

'ஒரு வாரத்துக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்குள் அந்த குடியிருப்புக்கான குடிநீர், மின்சாரம், சமையல் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்தனர். ஆனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மாதமான நிலையிலும் 82 முன்னாள் எம்.பி.க்கள் இன்னும் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் உள்ளனர்.

இது குறித்து லோக்சபாவின் அரசு பங்களா ஒதுக்கீட்டு குழு மீண்டும் ஆய்வு செய்துள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் முன்னாள் எம்.பி.க்கள் காலி செய்யாமல் இருப்பது குறித்து இந்தக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்வாறு காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொது சொத்துக்களில் அத்துமீறிகுடியிருப்போரை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் அரசு குடியிருப்புகளை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக வெளியேற்றும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட உள்ளது. அவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டால் உடனடியாக அந்த குடியிருப்புக்கான மின்சாரம், குடிநீர் மற்றும் சமையல் காஸ் இணைப்புகள்துண்டிக்கப்படும்.

சட்டத்தை உருவாக்கும் பார்லிமென்ட் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மீது இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுத்து காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறித்து இந்தக் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இவர்கள் காலி செய்யாததால் புதிதாக எம்.பி.யாக பதவியேற்றவர்கள் தற்காலிக குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Vadivel Natesan - namakkal,இந்தியா
30-செப்-201920:43:25 IST Report Abuse
N Vadivel Natesan A law maker should not be a law breaker. If he breaks the law he should be punished by the following: stopping of pension benefit permanently. and he should not be allowed to file nomination for next general election permanently
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
17-செப்-201919:11:18 IST Report Abuse
jagan kuwait சுந்து இன்னிக்கு நிறய கருத்து போட்டிருக்கார் ? லீவா?
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
16-செப்-201923:33:43 IST Report Abuse
Rajesh தண்ணீரை நிறுத்துங்கள் உள்ளேயும் போகாம, வெளியவும் போகாம ஓடிடுவானுங்க............ அப்புறம், அப்படியே அவர்கள் வீட்டுமுன் காமெராக்களை பொருத்திவிட்டு லைவ் டெலிகாஸ்ட் செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X