சிதம்பரம் கதிதான் மம்தாவுக்கு.. பா.ஜ எம்.எல்.ஏ பேச்சு

Updated : செப் 17, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
மம்தா, சிதம்பரம், எம்.எல்,ஏ, சர்ச்சை, பா.ஜ ,  சட்டசபை

லக்னோ : ''மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதி நேரிடும்,'' என, உ.பி., மாநில, பா.ஜ., - எம்.எல்.ஏ., எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விமர்சனம்


உ.பி.,யில், உள்ள பைரியா தொகுதியை சேர்ந்தவர், பா.ஜ., எம்.எல்.ஏ., சுரேந்திர சிங். திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து, சுரேந்திர சிங், பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுரேந்திர சிங் கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து, மம்தா கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இத்திட்டத்தை அவர் எதிர்ப்பதாக இருந்தால், வங்கதேசத்துக்கு, அவர் பிரதமராக இருந்து கொள்ளட்டும்; இங்கிருந்து, எதிர்க்கக் கூடாது.


வெற்றி


மம்தாவுக்கு கெட்ட நேரம் நெருங்கி வருவதை, அவர் அறியவில்லை. அவரது பேச்சையும், செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், காங்.,கை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ள நிலை தான், மம்தாவுக்கும் நேரிடும். மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, ராமராகவும், உ.பி., முதல்வர் ஆதித்யநாத், அனுமனாகவும், செயல்பட்டு, கட்சிக்கு வெற்றியை தேடித்தருவர். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
16-செப்-201922:30:17 IST Report Abuse
konanki சாரதா சிட் பண்ட் ஊழல் விவாகரத்தில் ரூ 1.40 கோடி வக்கீல் பீஸ் என்ற பெயரில் லஞ்சம் வாங்கிய தமிழ் நாட்டின் சீனியர் வக்கீலுக்கு இருக்குது ஆப்பு
Rate this:
Anandan - chennai,இந்தியா
19-செப்-201907:04:55 IST Report Abuse
Anandanவக்கீலுக்கு எதுக்கு பிரச்சினை வரப்போகுது....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-செப்-201920:08:17 IST Report Abuse
Sampath Kumar அய்யா உங்க பெயர் கூட எனக்கு தெரியாது ???? ஆனாலும் நீங்க இப்படி சீறி பாய்ந்து சொல்ல கூடாது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-செப்-201915:46:28 IST Report Abuse
Endrum Indian 1) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கோர்ட்டில் இந்த சுரேந்திர சிங் மீது உடனே மான நஷ்ட வழக்கு போடுவார், 2) கொல்கத்தா போலீசை அனுப்பி உடனே இவரை கைது செய்ய சொல்லுவாரே இந்த முஸ்லீம் பேகம் மும்தாஜ். எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தக்கப்பா சுரேந்திர சிங்கே???ஆனால் என்னுடைய குரக்களி சொல்வது ஒரு ஊழல் பெண் நிச்சயம் சிறைக்கு போகின்றார் அது சோனியாவா, மம்தாவா, மாயவதியா, கனிமொழியா. பியன்காவா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X