பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

Added : செப் 15, 2019
Share
Advertisement
 ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நேற்று, திடீரென கடல் உள்வாங்கியதால், மீன்களை கரையில் இறக்க முடியாமல், மீனவர்கள் சிரமம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்தம் அருகே, தென் கடற்கரையில், நேற்று அதிகாலை, திடீரென, 200 மீட்டர் கடல் உள்வாங்கியது. கடலோரத்தில் உள்ள பாசிகள் வெளியில் தெரிந்தும், தண்ணீரின்றி, கடல் சிப்பிகள் கரையில் தத்தளித்தன.மேலும், நேற்று மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள், விசைப்படகில் இருந்து, சிறிய ரக படகில் இறக்கிய மீன்களை, கரைக்கு கொண்டு வர முடியாமல் அவதிப்பட்டனர்.

மதியம், 2:00 மணிக்கு பின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததும், கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. மீனவர் ஒருவர் கூறுகையில், 'தற்போது, தென் மேற்கு காற்று வீசுவதால், திடீரென கடல் உள்வாங்கி, மதியத்திற்கு பின், கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். 'இது வழக்கமாக நடக்கக் கூடியது. இதனால், படகில் இருந்து மீன்களை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X