பொது செய்தி

தமிழ்நாடு

தென் மண்டல தடகளத்தில் ராமநாதபுரம் மாணவி தங்கம்

Added : செப் 16, 2019
Advertisement
 தென் மண்டல தடகளத்தில் ராமநாதபுரம் மாணவி தங்கம்

ராமநாதபுரம் : கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்து வரும் தென் மண்டல தடகளப்போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துஉள்ளார்.

தென் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா,மாலத்தீவு, கர்நாடகாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி பிளஸ்1 மாணவி எம்.ஐஸ்வர்யா 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் 35:50 மீ., வீசி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் 30:38 மீ., எறிந்து மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X