பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி பேனர்கள் மாவட்ட நிர்வாகம், 'கறார்'

Added : செப் 16, 2019
Share
Advertisement

காஞ்சிபுரம்:'அனுமதியின்றி பேனர் வைத்தால், அச்சிடுவோர் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு, சட்டப்படி, 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும்' என, காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, காஞ்சி புரம் கலெக்டர், பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:உயர் நீதிமன்ற உத்தரவை, உடனடியாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பிளக்ஸ் பேனர்கள், விளம்பர அட்டைகள் வைப்பதை நெறிமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டால், 9943907778 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.அனுமதியின்றி பேனர் அச்சிடுவோர் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு, சட்டப்படி, தலா, 5,000 ரூபாய் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டணை வழங்கப்படும்; அல்லது இரண்டும் வழங்கப்படும்.சென்னை உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்த பின், விதிகளுக்குட்பட்ட இடங்களுக்கு, பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்படும்.அவ்வாறு, மாவட்ட நிர்வாக அனுமதி வழங்கப்படும் விபரத்தையும், அச்சிடப்படும் அச்சகதாரர் விபரத்தையும் பேனரில் கண்டிப்பாக அச்சிட வேண்டும்.அவ்வாறு இல்லாத பேனர்கள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் என கருதி, அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X