விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,

Added : செப் 16, 2019
Share
 விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,

அவிநாசி : விபத்தில் சிக்கிய சிறுவனை, பல்லடம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நடராஜன், அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, புதுப்பாளையத்தில் வசிப்பவர், பரமேஸ்வரன். உறவினர் ஒருவர், சிறுவன் பூஜித், 10, ஆகியோருடன், மாருதி ஆம்னி வேனில், அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த லாரியை, அதன் பின்னால் வந்த வேன் முந்த முயன்றது. அந்த வேனுடன், பரமேஸ்வரன் வேன் மோதியது. இதில், இரு வாகனங்களில் பயணித்தவர்களும் காயமடைந்தனர்.

சிறுவன் பூஜித்தின், தோள் பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவிநாசியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு, அந்த வழியாக வந்த பல்லடம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நடராஜன், தன் காரை நிறுத்தி, காயமடைந்த பூஜித்தை, தன் காரில் ஏற்றி, அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். காயமடைந்த பிறர், '108' அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்தில் சிக்கியோரின் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X