எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பேனர் அகற்றும் பணிகள் விறுவிறு!

Added : செப் 16, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
'பேனர்' மற்றும், 'கட் அவுட்' கலாசாரத்திற்கு முடிவு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம், கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி, மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது. 'தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, பேனர் மற்றும் கட் அவுட்டுகளை அகற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
பேனர்,அகற்றும் பணி,விறுவிறு!

'பேனர்' மற்றும், 'கட் அவுட்' கலாசாரத்திற்கு முடிவு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம், கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி, மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.

'தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, பேனர் மற்றும் கட் அவுட்டுகளை அகற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், பேனர் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.சென்னை, பூந்தமல்லி பஸ் நிலையம், டிரங்க் சாலை, கரையான்சாவடி, குமணன் சாவடி, குன்றத்துார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள், பேனர் மற்றும் விளம்பர போர்டுகளை அகற்றினர்.

வேலுார் மாநகராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த, 1,178 பேனர்கள் அகற்றப்பட்டன. ஈரோட்டில், 150க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத் தப்பட்டன. திருச்சியில், திருமண நிகழ்ச்சிக்கு, ஆர்டர் செய்திருந்த, பிளக்ஸ் பேனர்களை வாங்க கூட ஆட்கள் வரவில்லை. மேலும், திருச்சி நகரில், பேனர் வைத்தவர்களே, நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டு இருந்த, பேனர்கள் அகற்றப்பட்டு, 81 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லுார், மேலப்பாளையம் என, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த, பேனர்கள் அகற்றப்பட்டன. டிஜிட்டல் பேனர்கள் கிழித்து அகற்றப்பட்டன.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திக்குளம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, 240 பேனர்கள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kathir -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201900:12:39 IST Report Abuse
kathir finally time has come
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
16-செப்-201921:21:09 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அப்படியே ரோட்டோரத்தில் அடுப்பை பற்ற வைத்து மசாலாவையும், காரப்பொடியையும் தூக்கி போட்டு சட்டியில் வறுக்கும்போது (குறிப்பாக அசைவ கடைகள்) அது காற்றில் கலந்து டூ வீலர் ஓட்டுனர்களின் கண்களை பதம் பார்க்கிறது. இது யாரையேனும் காவு வாங்குவதற்கு முன் சுகாதாரத்துறை இத்தகைய கடைகளின் உரிமங்களை கான்செல் செய்யவேண்டும். சுமார் முப்பது வருடங்களுக்கு முன் சாராய கடையும், கசாப்பு கடையும் ஊரின் கோடியில் இருக்கும். அவை தற்போது ஊரின் நடுவில், முக்கிய சாலை சந்திப்புகளில் இருக்கின்றன. அதன் கழிவுகளை சாப்பிட வெறி பிடித்த நாய்கள் அந்த கடைக்கு முன் அலைகின்றன. இதுவும் இரவில் தனியாக செல்பவர்களுக்கு பேராபத்தாக இருக்கும்.
Rate this:
17-செப்-201900:16:11 IST Report Abuse
கதிர் எப்படியெல்லாம் நடக்குது இந்த உலகத்துல.......
Rate this:
A P - chennai,இந்தியா
18-செப்-201913:41:27 IST Report Abuse
A Pநான் பல நாட்களாக இந்த தொல்லைகளை அனுபவித்துக் கொண்டு, திண்டாடிக் கொண்டிருக்கிறேன் . நண்பர் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேசனுக்கு நன்றிகள் பல. இவர் எழுதியது 100 க்கு 100 உண்மை. ரவுடிகளால் நடத்தப்படும் இது போன்ற கடைகளை அரசு ஊர் கடைசியில் வைக்க அனுமதிக்கலாம்....
Rate this:
Cancel
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
16-செப்-201920:22:02 IST Report Abuse
Jayaraman Sekar என்னடா இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை? இந்த பேனர் தொழிலில் நேரடியாக 1 - 1 /2 லட்சம் பேரும் மறைமுகமாக 4 லட்சம் பேரும் பாதிக்கப் படுகிறார்கள்.. ஏற்கனவே பிளாஸ்டிக் ஒழிப்பால் 8 லட்சம் பேர் பாதிக்கப் பட்ட நிலையில் இப்ப பேனர் விவகாரம்... ஏழைகள் பிழைப்பில் இந்த மோடி அரசும் எடப்பாடி அரசும் விளையாடுவது நியாயமா? நிச்சயமாக பாதிக்கப் பட்டவருக்கு நஷ்ட ஈடாக ஆளுக்கு 2 லட்சம் கொடுக்க வேண்டும் மாசா மாசம்.. இல்லை அவர்கள் எல்லாரும் தற்கொலை செய்து கொண்டுதான் சாக வேண்டும்... தாலி முதற்கொண்டு அடகு வைச்சு செய்யும் சிறு தொழிலுக்கு இவ்வளவு தடையா? இப்படிக்கு ஒரு சாமானியன்....
Rate this:
A P - chennai,இந்தியா
18-செப்-201913:48:37 IST Report Abuse
A Pஏன்டா உலகில் வேறு பிழைப்பே இல்லையா. வேலை இழப்பாம். பொத்துக் கொண்டு வருகிறதே. பேனரினால் எவ்வளவு உயிரிழப்புகள் நடைபெறுகின்றன என்பது தெரியவில்லையா. திரு சேஷன் அவர்கள் , தேர்தல் நேரங்களில் சுவற்றில் எழுதுவதோ, பேனர் வைப்பதோ சட்ட விரோதம் என்று கொண்டு வந்தது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு நடைமுறையில் எந்தக் கட்சிக்கும் பாதிப்பு வரவில்லையே. ரவுடிகள் தான் திமிர் தனமாக புரிந்து கொள்ள மாட்டார்கள். நல்ல ஒரு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்தவர்கள் இது போன்ற விஷயங்களில் புரிந்துகொண்டு அரசுக்கு ஒத்துழைத்து மக்களை நிம்மதியாக வாழ விடுவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X