பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில் துவக்கம்

Added : செப் 16, 2019
Share
Advertisement

கோவை:கோவையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன், நேற்று மாலை திறந்து வைத்தார்.
60 அணிகள் 6 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் 325 லீக் போட்டிகள் நடக்கின்றன. 60 ஆண்டுகளாகியும், சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாத குறையாக இருந்தது.சென்னையை தவிரதிண்டுக்கல், திருநெல்வேலியில் மைதானங்கள் உள்ளதால்ரஞ்சி கோப்பை, டி.என்.பி.எல்., உட்பட பல போட்டிகள் நடக்கின்றன.மைதானம் அமைக்க, அனைத்து வசதிகளுடனும் கூடிய, இடம் அமைய வேண்டுமென முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முடிவில், நவஇந்தியா அருகில் எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி (ராமகிருஷ்ணா) வளாகத்தில், சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்க 9 ஏக்கர் நிலம் கிடைத்தது.கடந்த 2 ஆண்டுகளாக பணி நடந்து வந்தது. வட்ட வடிவில், 73 மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்க கார்னரில், வீரர்களுக்கான பெவிலியனும், மைதானத்தின் அருகில் வீரர்களுக்கான பயிற்சி மைதானமும் அமைந்துள்ளது.
சர்வதேச தரத்தில் 3 'பிட்சுக்களும்,பிட்சுக்கு நேர் எதிரே இரு பக்கங்களிலும், '2 சைட் ஸ்கிரீனிங்' அமைந்துள்ளன. ஐ.பி.எல்., ரஞ்சி கோப்பை, டி.என்.பி.எல்., அனைத்து மாநில போட்டிகள் அடிக்கடி நடத்த வாய்ப்பு ஏற்படும். 8,000 முதல் 10,000 பேர் அமர்ந்து போட்டியை காணும் வகையில், காலரி அமையவுள்ளது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி, செயலாளர் கவுதமன் மற்றும் சங்க நிர்வாகிகள், திறப்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X