பொது செய்தி

தமிழ்நாடு

ஆடை ஏற்றுமதி திடீர் சரிவு; ஏற்றுமதியாளர்கள் கவலை

Added : செப் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருப்பூர் : கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, சரிவை சந்தித்துள்ளது.

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த நிதியாண்டின், 2019 - 20 முதல் மாதமாகிய, ஏப்ரலில், 9,786 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, முந்தைய நிதியாண்டை விட, 10.46 சதவீதம் அதிகம். மே மாதம், 17.93 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி பெற்றது. ஜூன் மாதம், திடீரென, 6.97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. மீண்டும் எழுச்சி பெற்ற ஏற்றுமதி, ஜூலை மாதம், 7.24 சதவீதம் வளர்ச்சி பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 8,967 கோடி ரூபாயாக, ஏற்றுமதி வர்த்தகம் சரிந்தது. டாலரில் கணக்கிடும்போது, இது, 2.44 சதவீத வீழ்ச்சியாகும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலர் விஜயகுமார் கூறியதாவது:ஜி.எஸ்.டி.,யால், 2017- - 18ல் சரிந்த ஆடை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், மீண்டெழுந்தது. இந்த நிதியாண்டில், மீண்டும் சரிவை சந்திப்பது, கவலை அளிக்கிறது.விலை குறைவாக இருப்பதால், அதிகமான ஆர்டர்கள், வங்கதேசம், வியட்நாம் நாடுகளை நோக்கி செல்கின்றன. இவை, ஏற்றுமதி சரிவுக்கு முக்கிய காரணங்கள்.சீன ஆடைகளுக்கு, அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது. சீனாவுக்கு ஆர்டர் வழங்கி வந்த அமெரிக்க வர்த்தகர்கள், தங்களை அணுகும், பிறநாட்டு உற்பத்தியாளர்களுக்கு, தயக்கமின்றி ஆர்டர்களை வழங்கி விடுகின்றனர்.அமெரிக்க சந்தையில், ஏற்றுமதியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-செப்-201908:30:40 IST Report Abuse
Bhaskaran நேற்றைய ஒரு செய்தியின்படி நாட்டில் உள்ளாடை விற்பனை சரிந்துள்ளது அந்த அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி சம்பந்தப்பட்டவர்கள் இதைப்பற்றி கவலைப்பட்டதாகவே காணோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X