சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் இருவர் வெட்டிக் கொலை

Added : செப் 16, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 துாத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் இருவர் வெட்டிக் கொலை

துாத்துக்குடி: துாத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் உள்ளிட்ட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். துாத்துக்குடி பிரையண்ட்நகரை தெருவை சேர்ந்தவர் விவேக் 38. கப்பலில் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இவரது நண்பர் சிவந்தாகுளத்தை சேர்ந்த முருகேசன் 40. மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். முருகேசன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விவேக் முருகேசன் நேற்று மாலை 5:00 மணியளவில் துாத்துக்குடி சிவந்தாகுளம் மாரியம்மன்கோயில் அருகே நின்றுபேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 7 பேர் கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிஓடினர். அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இருவரும் இறந்தனர்.

துாத்துக்குடி எஸ்.பி. அருண் பால கோபாலன் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார்.நேற்று பகலில் முருகேசன், அந்த வழியாக ஒருவர் பைக்கில் வேகமாக சென்றதை கண்டித்து மெதுவாக செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற நபர் சிலரை அழைத்து வந்து மாலையில் கொலை செய்தது தெரிய வந்தது. துாத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரித்தனர். மாரிமுத்து என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-செப்-201915:49:10 IST Report Abuse
மலரின் மகள்கள் தூத்துக்குடி பழைய பாதைக்கு மாறுகிறதா? மீண்டும் பஞ்சாபில் இருந்து காவல் உயரதிகாரிகள் யாரேனும் சிங் வரவேண்டும். அவர்கள் தான் நிச்சயமாக இதனை ஒரே வாரத்தில் சீராக்குவர், இதற்கு முன்பு நடந்தது போலவே. இதில் தமிளக அரசு கவுரவம் பார்க்க கூடவே கூடாது. தமிழக போலீசார் பொதுவாக வருமுன் காப்பது குற்றம் நடக்காமல் தடுப்பது என்பதற்கு தகுதியானவர்கள் தானா என்று பலநிகழ்வுகளில் சந்தேகிக்கவைக்கிறார்கள் என்று கூட சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். குற்றம் நடந்த பின்பு வேண்டுமானால் அவர்கள் குற்றத்தை கண்டுபிடிக்க வல்லவர்கள். அந்த அளவிற்கு மட்டுமே அதற்கு பிறகு நடக்கவேண்டியவை பெரிதாக மெச்சும்படி இருக்குமா என்பது ஆராயத்தக்கதே,
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-செப்-201906:15:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni வேலைக்கி போகாமாட்டானுக பொறுக்கிகள் இதுலே வேலை செய்து பிழைக்கும் நபர்களை கொலை செய்வது கொடூரம் தமிழ்நாடு வர வர கொலைகாரன்பட்டணமா ஆயிட்டது காரணம் சினிமா எடுக்கும் மூதேவிகளேதான்
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
17-செப்-201916:08:13 IST Report Abuse
THENNAVAN இப்பிடி ஒரு காரணம் சொல்ல அந்த எஸ் பி க்கு அசிங்கமாக இல்லையா உண்மையான காரணம் தெரிய அந்த கொலைகார கும்மலை துவட்டி எடுத்து சொல்லாமல் என்னமோ சின்னப்பையன் குச்சி மிட்டாய் மண்ணில்ப்போட்ட காரணம் சொல்றமாதிரி இருக்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X