பொது செய்தி

இந்தியா

60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி: 1980-90 காலகட்டத்தில் இளவயதினரை கவர்ந்திழுத்த தூர்தர்ஷன் தன்னுடைய 60-வயதில் அடியெடுத்து வைக்கிறது.


கடந்த 1959 ம் ஆண்டு செப்.,15-ல் தலைநகர் டில்லியில் பரிசோதனையாக துவங்கப்பட்டது. பின்னர் 1965-ல் சேவையாக மாற துவங்கியது.1972 ல் மும்பை மற்றும் அமிர்தசரஸ் நகரங்களில் ஒளிபரப்பபட்டது. 1975 முதல் பல்வேறு நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்தியது.


தொடர்ந்து1976 ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் தனித்துறையாக மாறியது. தற்போது கல்வி ,விவசாயம் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா உள்ளிட்ட 34 செயற்கை கோள் சேனல்களுடன் பல தரப்பட்ட சேனல்களை டி.டி.எச்சில் இலவசமாக வழங்கி வருகின்றன.

இது குறித்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதகாரி சாக்ஷி சேகர் கூறுகையில் தூர்தர்ஷன் கடந்த 60 ஆண்டுகளில் பல கட்டங்களை தாண்டி வந்துள்ளது. அதற்கு வயதாகிவிட வில்லை. இது இன்றைய டிஜிட்டல் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இது ஒரு மைல்கல் ஆகும். என்றார்.

தூர்தர்ஷன் இயக்குனர் ஜெனரல் சுப்ரியாசாஹூ கூறுகையில் தூர்தர்ஷன் உலகின் முன்னணி ஒளிபரப்பாளர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்ளலாம். தொடர்ந்து புதிய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கட்டும் என்றார்.

தொடர்ந்து 80-களில் தூர்தர்ஷைனை மட்டும் பார்த்து வந்தவர்கள் தற்போது மலரும் நினைவுகள் குறித்த டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் எது என்றும் , துவக்கத்தில் இருந்த டி.வி லோகோவையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சித்ராஹார், மகாபாரத், தேக் பாய் தேக், மால்குடி டேஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் முற்பகுதியிலும் இந்தியர்களின் கற்பனை மற்றும் மக்களை ஒன்றிணைத்த தூய பொழுதுபோக்குகளாக மக்களின் மனதில் பதிந்திருந்தது. 1983 ல் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை லட்க்கணக்கானோர் தூர்தர்ஷனில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-201916:10:24 IST Report Abuse
Lion Drsekar நேர்மையாக வாழ்ந்தவர்களுக்கு பாவம் எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் இன்னமும் இருக்கிறார்கள், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-201916:09:31 IST Report Abuse
Lion Drsekar ஒரு காலத்தில் இதை வைத்துக்கொண்டு பல லட்சம் கோடி சம்பாதித்தவர்கள் இன்று பாவம் ஒளியும் ஒலியும், மருத்துவம், நாடகம், கற்பக விருட்சமாக இருந்தது, பலர் செட்டில் ஆகிவிட்டனர், சிலர் வெளிநாட்டுக்கு சட்ட விரோதமாக வேலைக்கு சேர்ந்து இன்னமும் பல லட்சம் கோடி ஈட்ட்டிக்கொண்டு இருக்கின்ற்னர். வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel
Guru - சென்னை,இந்தியா
16-செப்-201914:19:21 IST Report Abuse
Guru நேற்று பொதிகை டிவி ரங்கோலி நிகழ்ச்சியில் சமந்தா ஹிட் பாடல்கள் ஒளிபரப்பினர். நீண்ட காலம் பிறகு டிடி சேனல் பார்ப்பதால் அச்சேனல் குறித்த பழமையான நினைவுகளை அசைப்போட்டபடி கொஞ்ச நேரம் ரங்கோலி பார்த்துக்கொண்டிருந்தேன். திடுமென சில நொடிகள் பாடல் காட்சி freeze ஆகி அப்படியே நின்றுவிட்டது - அதன்பின், ’தடங்கலுக்கு வருந்துகிறோம்’ கார்ட் போட்டனர். காலங்கள் மாறினாலும் டிடி இன்னும் பழமை மாறாமல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X