வேலைக்கு பஞ்சமில்லை: திறமைக்குதான் பஞ்சம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (50)
Advertisement

பேரேலி: நாட்டில் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் திறமையான வேலையாட்களுக்கு தான் பஞ்சம் என மத்திய அமைச்சர் சந்தோஷ்கங்வார் தெரிவித்துள்ளார்.







உ.பி.மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போது அவர் வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்களுக்கு திறமை குறைவு என்ற பொருள்படும் வகையில் பேசினார்.






இதனையடுத்து வேலைவாய்ப்பு குறித்து வட இந்திய இளைஞர்களையும் பெண்களையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அவமதித்து விட்டதாகவும், பொருளாதார மந்த நிலைக்கான காரணத்தை தவிர்ப்பதற்காக இந்த கூற்றை பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் கூறியதாவது: நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பிற்கு பஞ்சம் இல்லை. அதே நேரத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடைய நபர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். தற்போதைய மத்திய அரசு இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக அவர்களுக்கு திறன் பயற்சி அளித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை ஒவ்வொரு நாளும் தன்னுடைய அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என கூறினார்.

முன்னதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் , நாற்பது ஆண்டுகளாக வேலையின்மை அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை என மத்திய அமைச்சர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-செப்-201906:10:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni படிச்சவுடனே வேலைக்குப் போறவன் லக்கி என்று சொல்லுறாங்களே அது உண்மை அதுலே எவ்ளோ கஷ்டங்கள் இருப்பினும் பொருத்துண்டு சகிச்சுண்டு திறமையால் மேலுக்குவரனும் பொறாமை சோறு படுமா அப்பா அம்மா செத்தால் இந்தவேலை இல்லாப்பட்டதாரிகள் நிலை என்னாகும் என்று எவனாச்சும் சிந்திக்குறீங்களா படிச்ச பட்டதாரிகள் வேலைதன்னை வந்து நாடனுமாம் அவனுக தானா போவேமாட்டானுகலாம் படிச்சதெல்லாம் மறந்து ங்கே ன்னு விட்டத்தைப்பார்த்தால் வேலைக்கிட்டுமோ
Rate this:
Share this comment
Cancel
ranjani -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201921:33:55 IST Report Abuse
ranjani well said
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-201918:40:46 IST Report Abuse
skv srinivasankrishnaveni velaikidaikkaamal சோம்பேறியா வீட்டுலே குந்தி துண்ணும் பிள்ளையாண்டானுக்கு அதீத செல்லம் தந்து ஸ்பாயில் பண்ணது அவன் பெற்றோர்தானே ஐயா இருக்கும் சோறுபோட்ட நிலத்தைவிற்று படிக்கவச்சாங்க தந்தை ஆனால் அந்தப்பிள்ளை நன்னாவே ரெங்களே தெரியும் வேலைக்குப் போகாமல் இருக்கானே யாருங்க காரணம் அவன் வீட்டுலே அவன் கசின்கள் பாரினலே இருக்கான்னு பொறாமை போறுமா முயற்சி செய்யணுமா வேண்டாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X