பொது செய்தி

தமிழ்நாடு

உதவி வேளாண் அலுவலர்கள் 525 பேர் நியமனம்

Added : செப் 16, 2019
Advertisement

அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட, 525 உதவி வேளாண் அலுவலர்கள், பல்வேறு மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சிக்கல்:
வேளாண் துறையில், உதவி வேளாண் அலுவலர் பணியிடம் முக்கியமானது. விவசாயிகளிடம், அரசின் திட்டங்களை எடுத்துச் சென்று, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, இவர்களின் பணி.இதற்காக, அரசின் மானிய உதவிகள், சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை, விவசாயிகளுக்கு இவர்கள் பெற்றுத் தர வேண்டும். இதற்காக, 2,316 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை, அரசு உருவாக்கி உள்ளது.

இதில், 600க்கும் மேற்பட்ட பதவிகள், பல ஆண்டுகளாக நிரப்பப் படாமல், காலியாக இருந்தன. இதனால், அரசு திட்டங்களை விவசாயிகளிடம் சேர்ப்பதில், சிக்கல் நீடித்து வந்தது.இதனால், காலி பணியிடங்களை நிரப்ப, வேளாண் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி, இயக்குனர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 525 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.

பட்டியல்:
இதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, சமீபத்தில் வேளாண் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், அந்தந்த மாவட்டங்களில் காலியாகவுள்ள, வேளாண் துறை, வேளாண் விற்பனை பிரிவு அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X